News May 21, 2024

தனித்துவமான சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா

image

SRH வீரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். 13 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒவ்வொரு போட்டியிலும் 30க்கும் குறைவான பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், இதுவரை எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்ததில்லை. மேலும், இந்த சீசனில் அதிக சிக்சர்கள் (41 Sixes) அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

News May 21, 2024

அதிமுக மீது அதிருப்தியில்லை : செல்லூர் ராஜூ

image

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி என செல்லூர் ராஜு புகழ்ந்தது அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியது. இதுகுறித்து அவர், எல்லோரிடமும் எளிமையாக பழகும் தலைவர் என்பதால் ராகுலை புகழ்ந்தேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கமளித்தார். மேலும், அதிமுகவில் உங்களுக்கு ஏதேனும் அதிருப்தி இருக்கா? என்ற கேள்விக்கு, எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.

News May 21, 2024

மின்சாரத்தை பிடுங்கினாரா முன்னாள் மனைவி?

image

ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாசுக்கும், அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து வாங்கிய தையூர் பங்களாவில் ராஜேஷ் தாஸ் தனியாக வசித்து வருகிறார். அங்கு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதற்கு பீலாதான் காரணம் என்றும் ராஜேஷ் தாஸ் குற்றம்சாட்டுகிறார். தான் வசிக்காத வீட்டில் மின்சாரத்திற்கு செலவு செய்ய விரும்பாததால் இணைப்பை துண்டிக்கச் சொன்னதாக பீலா கூறுகிறார்.

News May 21, 2024

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவானது எப்படி?

image

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கி 2001இல் பிரிக் (BRIC) கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு என்ற பெயர் பெற்றது. நடுத்தர வருவாயைக் கொண்ட, அதே நேரம் வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உறுப்பு நாடுகளாக ஆர்வம் தெரிவித்து வருகின்றன.

News May 21, 2024

இந்தியா உதவியை நாடும் இலங்கை

image

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய இலங்கை ஆர்வம் தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் குழுவில் இணைய, இந்தியாவின் உதவியை நாடவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், UAE ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்திருப்பது பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரம் மற்றும் பங்களிப்பின் வலுவான அறிகுறியாகும் என்றார்.

News May 21, 2024

4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

News May 21, 2024

ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது

image

கனமழைக்காக தேனி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு எந்த மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் இல்லை.

News May 21, 2024

AI தொழில்நுட்பத்துக்காக குரல் திருட்டு?

image

ChatGPTயின் புதிய AI தொழில்நுட்பத்துக்காக அந்நிறுவனம் தனது குரலை திருடிவிட்டதாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜான்சன் குற்றம்சாட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன் குரலைப் பயன்படுத்த அனுமதி கேட்டு ChatGPT அவரை அணுகியதாகவும், அதற்கு தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஸ்கார்லட் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், குரல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் மீது நடிகை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

News May 21, 2024

பிரதமர் மோடிக்கு முதல்வர் எச்சரிக்கை

image

புரி ஜெகந்நாதர் கோயிலில் தொலைந்து போன சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசிய மோடிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக பழித்துப் பேசுவதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்த அவர், தமிழக மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இரட்டை வேடம் போடும் மோடி, வெறுப்பு பேச்சுக்களின் மூலம் மாநிலங்களுக்கு இடையே பகையைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டினார்

News May 21, 2024

பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு

image

தமிழரான வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்து ஒடிஷாவில் பிரதமர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கோயிலின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது மோடி சுமத்தலாமா?, தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் எனக் கூறுவது தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? என்று முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!