News May 21, 2024

5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் வெல்வாரா?

image

ரேபரேலியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ரேபரேலியில் இதுவரை 20 தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 17 முறை காங்கிரஸ், 2 முறை பாஜக, ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது. ரேபரேலி தொகுதிக்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அகிலேஷ் கட்சி எம்எல்ஏக்களே வெற்றி பெற்றுள்ளதால், அதிக வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.

News May 21, 2024

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு

image

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி பீலா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஏற்கனவே பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதும், அது தொடர்பான விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பாலியல் வழக்கில் ஏற்கெனவே ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.

News May 21, 2024

IPLஇல் அதிக ரன் குவித்த வீரர்கள்

image

▶விராட் கோலி – 973 (2016) ▶ஷுப்மன் கில் – 890 (2023) ▶ஜாஸ் பட்லர் – 863 (2022) ▶டேவிட் வார்னர் – 848 (2016) ▶கேன் வில்லியம்சன் – 735 (2018) ▶கிறிஸ் கெயில் – 733 (2012) ▶மைக்கல் ஹசி – 730 (2013) ▶டு பிளசி – 730 (2023) ▶கிறிஸ் கெயில் – 708 (2013) ▶விராட் கோலி – 708*(2024). இதில், பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் மட்டுமே 2 முறை இடம்பிடித்துள்ளனர்.

News May 21, 2024

24 மாநிலங்களில் முழுமையாக நிறைவடைந்த தேர்தல்

image

5 கட்ட தேர்தலில் இதுவரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 543 இடங்களில் 80% இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. 6ஆவது கட்டமாக மே 25ஆம் தேதி 57 தொகுதிகளிலும், 7ஆவது கட்டமாக ஜுன் 1ஆம் தேதி 57 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 24 மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ளது. உ.பி, மே.வங்கம் மாநிலங்களில் தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News May 21, 2024

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படம்

image

பாரத ரத்னா விருது பெற்ற இந்தியாவின் முதல் இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகவுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமும், கர்நாடகாவை சேர்ந்த முன்னணி இயக்குநர் குழுவும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், அவரது கதாபாத்திரத்திற்கு த்ரிஷா அல்லது நயன்தாராவை தேர்வு செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

News May 21, 2024

அமமுகவை பாஜகவுடன் இணைத்துவிடலாம்: காங்., எம்.பி

image

டிடிவி தினகரன் ஆர்எஸ்எஸ்ஸின் புதிய விசுவாசியாக மாறியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை விமர்சிப்பதாக பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வதாக வேதனை தெரிவித்த அவர், புதிதாக ஆர்எஸ்எஸ்-இல் சேர்ந்தவர்கள் அதிக விசுவாசம் காட்டுவார்கள் என்றார். மேலும், இதற்கு பேசாமல் அவர் அமமுகவை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும் எனவும் சாடினார்.

News May 21, 2024

3 நாள்கள் உண்ணாவிரதம் இருக்க போகும் பாஜக தலைவர்

image

பூரி ஜெகநாதரே மோடியின் பக்தர் தான் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் சம்பித் பத்ரா, தவறுக்காக உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியுள்ளார். மோடி பூரி ஜெகநாதரின் பக்தர் என்று கூறுவதற்கு பதிலாக, மாற்றிக் கூறிவிட்டதாக சம்பித் பத்ரா விளக்கமளித்த போதும், அவரின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தவறுக்கு மன்னிப்பு கேட்டு 3 நாள்கள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.

News May 21, 2024

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கியது

image

ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி இன்று பூஜையுடன் தொடங்கியது. மாநில அரசு நேற்று சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில், கட்டுமான பணிகளை தொடங்கியதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி ஆகியவை கட்டப்படுகிறது. 18 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட உள்ளது. 2019ல் பிரதமர் மோடி இதற்கு அடிக்கல் நாட்டினார்.

News May 21, 2024

தமிழகத்தில் இயல்பை விட 9% கூடுதல் மழை

image

தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் மே 21 வரை 105.5மி.மீ என்ற அளவில் பதிவாகும் மழையளவு, இந்த வருடம் 114.7மி.மீ என்ற அளவில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், மழை அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News May 21, 2024

பாஜக வேட்பாளர் பரப்புரை செய்ய 1 நாள் தடை

image

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதியும், பாஜக வேட்பாளருமான அபிஜீத் கங்கோபாத்யா 1 நாள் பரப்புரையில் ஈடுபட
தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் அவரின் பேச்சு இருந்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, மம்தா பானர்ஜியின் விலை என்ன? என்று சர்ச்சையான கருத்தை அபீஜித் பரப்புரையின் போது கூறியிருந்தார்.

error: Content is protected !!