India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டிகளில் பதிவாகும் ஒவ்வொரு டாட் பந்துக்கும், 500 மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால், போட்டிகளின் போது பதிவாகும் டாட் பந்துகளுக்கு டிவியில் பூஜ்ஜியம் என்று வராமல், மரக்கன்றின் படம் காட்டப்படும். SRH-KKR முதல் Qualifier போட்டி இன்று அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. RCB-RR இடையேயான எலிமினேட்டர் போட்டியும் நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
புரோட்டா பொதுவாக மைதா எனப்படும் வெள்ளை மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. மைதாவில் நார்ச்சத்து குறைவு. இதனால், அதிகம் புரோட்டா சாப்பிட்டால் மலச்சிக்கல், வயிற்றுப்பூசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். புரோட்டாவில் எண்ணெய் அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் சத்துள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணியாக உள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் மாரியப்பன் மகத்தான பெருமையை தேடித் தந்துள்ளதாக பாராட்டிய அவர், வருங்காலத்தில் அவர் மேலும் பல உயர்ந்த இலக்குகளை எட்ட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
SRH-க்கு எதிரான Qualifier 1 போட்டியில், KKR அணி வெற்றி பெற்றுள்ளது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய KKR அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயரின் அதிரடியான பார்ட்னர்ஷிப்பால், KKR அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு KKR அணி முன்னேறியது.
விஜய் நடித்துள்ள ‘GOAT’ படத்தின் OTT உரிமையை, ரூ.110 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில், பிரபுதேவா, பிரஷாந்த், ஸ்நேகா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படம், வரும் செப்.5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சுக்கிர பகவான் அண்மையில் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதனால், மிதுனம், சிம்மம், கடகம், மீன ராசிகளுக்கு அதிர்ஷ்டம் யோகம் பெறுகின்றனர். பண வரவில் குறை இருக்காது. எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வடக்கன் படத்திற்கு சென்சார் வழங்க தணிக்கை வாரியம் அனுமதி மறுத்துள்ளது. படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், படத்திற்கு சென்சார் வழங்கப்படவில்லை. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. மே 24இல் படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது
திரையரங்குகளில் உணவுப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக PVR ஐநாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் டிக்கெட் விற்பனையால் ₹3,279.9 கோடியும், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களின் விற்பனையால் ₹1,958.4 கோடியும் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்தாண்டில், உணவுப்பொருட்கள் ₹1,618 கோடிக்கும், டிக்கெட் ₹2,751.4 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூரில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கலில் நாளை காலை 8.30 வரை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஜாமின் கிடைப்பதை பல வழிகளில் மோடி தடுக்க முயன்றதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அனுமன் ஆசி தனக்கு இருந்ததால் சிறையில் இருந்து வெளிவந்ததாக கூறிய அவர், மோடியின் சர்வாதிகாரம் இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை என்றார். ஒட்டுமொத்த கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடித்து, இந்திய மக்களை சர்வாதிகாரிகளிடம் இருந்து காக்க வேண்டும் என சூளுரைத்தார்.
Sorry, no posts matched your criteria.