India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க பலமுறை அவரிடம் வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் தரவில்லை என்று மூத்த நடிகை வடிவுக்கரசி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பேசிய வடிவுக்கரசி, சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார். இதைக்கேட்டு ஓடிவந்து அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறிச் சென்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலையின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 13 அப்பாவி உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த 17 போலீசார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் அதே மிடுக்கோடு பதவி, அதிகாரத்தோடு பவனி வரும் நிலையில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் தூத்துக்குடி மக்களோ நீதி வேண்டி போராடி வருகிறார்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதனால், திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வைகாசி விசாக நன்னாளான இன்று (மே 22) அதிகாலையில் எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து மாலையில் ஆலயம் சென்று வேல்முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து, 6 நெய் விளக்கேற்றி, செவ்வரளி மலர்மாலை சாற்றி, திருப்புகழ் பாடி வணங்கினால் தீராத நோய்களும் கடன் பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்தியாவில் ராம ராஜ்யம் நிறுவப்படுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பொகாரோ பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் வலிமையான நாடாக அனைத்து துறைகளிலும் இந்தியா உருவெடுத்துள்ளது. பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து வங்கிகளும் பெரும் லாபத்தை பதிவு செய்துள்ளன என்றார்.
தென்னிந்திய திரையுலகில் திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியில் திருமணமான பிறகும் நாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறிய அவர், அதே போன்ற நிலை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகிலும் வர வேண்டும் என்றார். அந்த மாற்றத்தை காண தான் ஆவலோடு காத்திருப்பதாகக் கூறினார்.
உலகம் முழுவதும் KP2 வகை கொரோனா தொற்று பரவி வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் குறைந்த அளவிலேயே இந்த வகை தொற்று பதிவாகியிருப்பதால், அச்சப்படத் தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற KKR அணி முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. அதே நேரத்தில், தோல்வி அடைந்த SRH-க்கு இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதும் உள்ளது. அதாவது, இன்று நடக்கும் Eliminator இல் வெல்லும் அணியுடன் (RR அல்லது RCB) SRH அணி மோதும். அதில், SRH அணி வென்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
*பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சி அமைப்பார் – பிரசாந்த் கிஷோர்
*இந்தியாவில் ராம ராஜ்யம் நிறுவப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்
*சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் – அன்புமணி
*2023-24 Q4 காலாண்டில், ஓஎன்ஜிசி நிகர லாபமாக ₹11,526 கோடியை ஈட்டியுள்ளது.
*உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.
✍தலை துண்டிக்கப்படும் ஒருவரின் முடி உதிர்வதற்காக நீங்கள் புலம்பாதீர்கள். ✍வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைதான் புரட்சிகர வரலாறுகள் காட்டுகின்றன். ✍கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍ராணுவத்தில் முன்னேறுவதை விட பின்வாங்குவதற்கு அதிக தைரியம் தேவை.
Sorry, no posts matched your criteria.