India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், சுகமானதாகவும் அமைய ரயில்வே பல்வேறு விதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றாக, ரயிலில் சத்தமிட்டு பேசவோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்கவோ, செல்போனில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாகப் பேசவோ கூடாதென ரயில்வே விதி உள்ளது. யாரேனும் இந்த விதியை மீறினால், டிக்கெட் பரிசோதகரிடம் அதுகுறித்து புகார் அளிக்கலாம் என்று ரயில்வே விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் யூ-டியூபர் இர்ஃபான் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்தியதால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, சர்ச்சையான வீடியோவை அவர் நேற்று நீக்கியிருந்த நிலையில், தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாட அமெரிக்கா சென்றுள்ள வங்கதேசம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஹுஸ்டனில் நடந்த முதல் போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அமெரிக்கா, 156 ரன் எடுத்து வெற்றி பெற்று வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்தது. இந்திய வம்சாவளி அமெரிக்க வீரர்கள் படேல் 12, நிதிஷ்குமார் 10, ஹர்மித் சிங் 33 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மக்கியா உயிரியல் பூங்காவில் ‘அம்பிகா (10) என்ற புலி நேற்று உயிரிழந்தது. நேற்று மதிய உணவுக்கு பின்னர் உறங்கிய அப்பெண் புலி, மீண்டும் எழுந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் பாம்புக்கடி காரணமாக புலி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் உடற்கூராய்வு அறிக்கையில் அதிக வெப்பம் தாங்காமல் இருதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், மாணவர்கள் இந்தாண்டும் பிகாம், பிசிஏ, பிபிஏ, பிஎஸ்சி (சைக்காலஜி) ஆகிய பாடப் பிரிவுகளில் சேரவே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, பிகாமில் சேர அதிகமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். ஒரு சீட்டுக்கு 50 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். சென்னை கல்லூரிகளில் பிகாமில் சேர ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு, அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன்பின் புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சென்னை காசிமேடு முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளை ₹100 கோடியில் அழகுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சிஎம்டிஏவின் இத்திட்டத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த NGT, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, ஆதலால் அனுமதி பெறும் வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாணவர்களின் கையில் வண்ணக் கயிறுகள் கட்டத் தடை, பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல், பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் ஆகிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளது.
ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி முனிர் அக்ரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புதிய இந்தியா தனது எதிரிகளை விட்டு வைக்காது, அவர்களிடத்தில் சென்று கொல்லும் என பேசியதை சுட்டிக்காட்டி, தங்கள் நாட்டிலும், கனடாவிலும் இந்திய உளவுத்துறை ரகசியமாக பலரை கொன்றுவிட்டதாகவும், அமெரிக்காவிலும் முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நடிகர் ராமராஜன், நளினி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகனுக்கு குழந்தை உள்ள நிலையில், மகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதுகுறித்து வருத்தத்துடன் பேட்டியளித்துள்ள ராமராஜன், தனது மகனின் குழந்தை தன்னை செல்லப் பெயர் வைத்து கூப்பிடுவதாகவும், ஆனால் மகளுக்குதான் இன்னும் குழந்தை பிறக்காதது வருத்தம் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.