India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல் எடையைக் குறைக்க நடைப் பயிற்சியைக் காட்டிலும், சைக்கிள் பயிற்சி நல்ல ரிசல்ட் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மன அழுத்தம், மனச்சோர்வு பிரச்னை இருப்பவர்களுக்கு இப்பயிற்சி பயன் தரும். எலும்புகள், தசைகள் வலிமை பெறவும், இதய நோய், புற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உதவும்.
தமிழக மக்கள் மீது மோடி கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு மத்திய அரசு ரூ.275 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். கர்நாடகாவுக்கு ரூ.3454 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் இன்னும் மீதம் இருப்பதால் நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். KKR-க்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி அவர், 68 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பாஜகவும், மத்திய அரசும் அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்தித் தன்னை கைது செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையின் பிரமாணப் பத்திரம் தொடர்பாக நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த பதில் மனுவில், ED குற்றச்சாட்டுக்கள் போலியானவை, அடிப்படை ஆதாரம் இல்லாதவை எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்குச் சாதகமாக தான் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
வறட்சி பாதித்த 22 மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளால் குடிநீர் வழங்கலில் சுணக்கம் ஏற்படக் கூடாது எனக் கூறியுள்ள அவர், கூட்டுக் குடிநீர்த் திட்ட, நீரேற்ற நிலையங்களுக்குச் சீரான மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கோடைகாலம் முடியும் வரை லாரிகள் மூலம் மக்களுக்குக் குடிநீர் வழங்க அவர் ஆணையிட்டுள்ளார்.
நிலையற்ற வாழ்க்கையில் மருத்துவக் காப்பீடும், ஆயுள் காப்பீடும் தேவை எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பலர் ஆயுள் காப்பீடு எடுக்க முன் வந்தாலும் காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்வதில் சந்தேகம் இருக்கிறது. இதற்கு, ’20X காப்பீடு’ விதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஆண்டு வருமானத்தின் 20 மடங்குக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முன் மக்களுக்கு அதைப்பற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அரிசியை யார் சாப்பிடலாம் என்பதில் அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பே ரேஷனில் விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
MI அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் DC அணி 5.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்களை குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஃப்ரேஸார் மெக்குர்க் 15 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். ஏப்ரல் 20ஆம் தேதி நடந்த SRH அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் 15 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார். இதே நிலையில் டெல்லி பேட்டிங் செய்தால், 20 ஓவரில் 300 ரன்களை தாண்டிவிடும்.
பாஜகவின் ‘400 சீட்டு’ படம் தோல்வி அடைந்துவிட்டதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பிரதமர் பொய்களைக் கூறி வருவதாக தெரிவித்த அவர், 2ஆம் கட்டத் தேர்தல் பாஜகவுக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை கொடுத்துள்ளதாகவும் விமர்சித்தார். முன்னதாக 400 இடங்களை தனித்து வெல்வோம் என்ற மோடி, 2 கட்டத் தேர்தலுக்கு பிறகு என்டிஏ மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் வெடிக்காத குண்டுகளை முழுமையாக அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. வல்லுநர் பெஹர் லோதாமர் தெரிவித்துள்ளார். ஐ.நா. கண்ணிவெடி அகற்றல் பிரிவிடம் பெஹர் அளித்த அறிக்கையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் சண்டையில் காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளின் எடை 3.7 கோடி டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.