India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் மார்ச் 14ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து ஐசியூவில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலையில் தற்போது வரை முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேதனையில் உள்ள அவரது குடும்பத்தினர் அருந்ததியின் மருத்துவச் செலவை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சிலரது உதவியுடன் செய்து வருவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
நாம் தாயாக வணங்கும் பசுவைச் சிறுபான்மையினர் இறைச்சியாக உண்ண காங், அனுமதி அளிக்க உள்ளது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரத்தை வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காங்., பசுவதையைத் தடையின்றி அனுமதிக்கப் போகிறார்கள் என விமர்சித்துள்ளார். இதன்மூலம் நாட்டைப் பிளவுபடுத்த காங்., சதி செய்வதாகச் சாடியுள்ளார்.
மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளின் விலை ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,00, ₹6,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோடியும், அமித் ஷாவும் வியாபாரிகள் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அசாமில் பிரசாரம் செய்த அவர், பாஜக அரசு ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுள்ளதாகத் தெரிவித்தார். ஏழைகளிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடுத்துப் பணக்காரர்களுக்குக் கொடுப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், பிறகு நாடு எப்படி வளர்ச்சி அடையும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,282 பில்லியன் டாலர் குறைந்து 640.33 பில்லியன் டாலராக உள்ளது. 648.56 பில்லியன் டாலருடன் உச்சத்தில் இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, 2ஆவது வாரமாகச் சரிந்துள்ளது. தங்கம் கையிருப்பு 1.01 பில்லியன் டாலர் அதிகரித்து 56.8 பில்லியன் டாலராக உள்ளது. special drawing rights பொறுத்தமட்டில், 43 மில்லியன் டாலர் குறைந்து 18.03 பில்லியன் டாலராக உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சரவெடியாக வெடித்துத் தள்ளிய டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய மெக்குர்க் 84, சாய் ஹோப் 41, ஸ்டப்ஸ் 48* ரன்கள் விளாசினர். இதையடுத்து MI அணிக்கு 258 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் வுட், பும்ரா, சாவ்லா, நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
KKR அணிக்கு எதிரான 42ஆவது லீக் ஆட்டத்தில் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து PBKS அணி வென்றது. அந்தப் போட்டியில், சஷாங்க் சிங் 68 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் சஷாங்க் குறித்துப் பேசிய முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன், “SRH அணியில் இருந்தபோது சிறந்த வீரரான அவரைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பாராட்டைப் பெற தகுதியான சிறப்பாக விளையாடினாய் நண்பா” எனக் கூறினார்.
2023ஆம் ஆண்டில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 34,500 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் வர்த்தகம் & மேம்பாட்டுக்கான பிரிவு (UNCTAD) தெரிவித்துள்ளது. UNCTAD வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்திய சேவைகள் ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகள் முக்கிய பங்களிப்பு வழங்கின. உலக சராசரியைவிட (8.9%) இந்தியாவின் வளர்ச்சி (11.4%) உயர்வாகப் பதிவாகியுள்ளது.
கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில், நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, “Rehydration Points” மையங்களை அமைக்கவும், ஜூன் 30ஆம் தேதி வரை 89 லட்சம் ORS பாக்கெட்டுகளை மக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.