India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலங்கானாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து குஷ்பு ரோடு ஷோவில் கலந்து கொண்டார். செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடும் தெலங்கானா மாநிலப் பாஜக தலைவர் கிஷன் ரெட்டியை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். சில நாட்களுக்கு முன்பு உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பரப்புரையில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அண்டை மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமாகித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. முடியை கட் செய்து புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் துணை முதல்வரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதைப் போல, இந்தியாவிற்கு ஐந்து பிரதமர்களைக் கொண்டுவர காங்., தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது எனக் கூறினார்.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி அழகர் கோவிலிலிருந்து மதுரை சென்ற கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு இன்று கோவிலை வந்தடைந்தார். ஏப்ரல் 23 அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் 26ஆம் தேதி தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மலைக்குத் திரும்பினார். இன்று பகல் 12:30 மணிக்குக் கோவிலை அடைந்த அழகருக்கு பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால், பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, திருச்சி, கோவை, ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர் உள்பட 18 மாவட்டங்களில் நாளை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் சில நிமிடங்கள் செயலிழந்தன. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்களும் செயல்படாமல் போனதால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி வேலை செய்ய துவங்கியது. அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் கை ஓங்கும்போது, பந்துவீச்சாளர்கள் அழுத்தத்துடன் செயல்படுவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் போட்டியின் முடிவை மாற்ற 2 அல்லது 3 ஓவர்கள் போதும் என்றிருந்த நிலைமாறித் தற்போது 2, 3 பந்துகளே போட்டியை வேறு திசைக்கு கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை 247 ரன்கள் எடுத்தும், 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. LSG சார்பில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 76, ஹூடா 50 ரன்கள் எடுத்தனர். கடைசியில் க்ருணால் பாண்டியா 13, பதோனி 18 ரன்கள் எடுக்கவே அந்த அணி சிறப்பான ரன்களை எட்டியது. RR சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான், அஷ்வின், போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
நியூ மெக்சிகோவில் வாம்பயர் ஃபேஷியல் செய்துகொண்ட 3 பெண்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு & தடுப்பு மையம் நடத்திய விசாரணை அறிக்கையில், ஏற்கெனவே பயன்படுத்திய ஊசிகளை பயன்படுத்தியதன் காரணமாக எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமெனக் கூறப்பட்டுள்ளது . இந்த ஃபேஷியலில், ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் பிளேட்லெட்டுகளை முகத்தில் செலுத்தி சிகிச்சை அளிப்பர்.
ஐசிஐசிஐ வங்கி கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 17% உயர்ந்து ரூ.10,707 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.9,122 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 8% அதிகரித்து ரூ.17,667 கோடியிலிருந்து ரூ.19,093 கோடியாக உயர்ந்துள்ளது. வாராக் கடனைப் பொறுத்தமட்டில் 2.81%இல் இருந்து 2.16%ஆக குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.