India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகில் மொத்தமாக 9 லட்சம் தீவுகள் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 1,382 தீவுகள் உள்ளன. அவற்றில் சில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். இதே போல உலகின் பல நாடுகளில் தீவு கூட்டங்கள் உள்ளன. அதிக தீவுகளைக் கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சுவீடன் இருக்கிறது. இந்த நாட்டில் 2,67,570 தீவுகள் உள்ளது. இதில் 96 ஆயிரம் தீவுக்கு மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது. 80 ஆயிரம் தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, மதுரை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் பேச்சு முரணாக உள்ளது என சுவாதி மாலிவால் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது அவரின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக அவர் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பிபன் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை முறையாக நடக்க வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். தன்னை முடிந்த வரை விமர்சித்துவிட்டு நியாயம் பற்றி கெஜ்ரிவால் பேசுவதாக சுவாதி மாலிவால் விமர்சித்துள்ளார்.
6ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. இதுவரை 5 கட்டமாக 429 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. 6ஆம் கட்ட தேர்தல் 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளையுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் 899 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மக்களவைத் தேர்தலுடன், ஒடிஷாவின் 43 சட்டப்பேரவை இடங்களுக்கும் அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
*மேஷம் – அமைதி தேவை
*ரிஷபம் – ஜெயம் உண்டாகும்
*மிதுனம் – செய்யும் செயலில் வெற்றி
*கடகம் – லாபகரமான நாள்
*சிம்மம் – உயர்வு கிடைக்கும்
*கன்னி – முயற்சிக்கேற்ற பலன்
*துலாம் – யோகமான நாள்
*விருச்சிகம் – சிந்தித்து செயல்படவும்
*தனுசு – பரிவு கிடைக்கும்
*மகரம் – நன்மை உண்டாகும் *கும்பம் – நட்பான சூழல் ஏற்படும் *மீனம் – வெற்றிகரமான நாள்
எலிமினேட்டர் போட்டியின் 15வது ஓவரில் அவேஷ் வீசிய பந்தை RCB வீரர் தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அவேஷ் LBWக்கு அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார். DK ரிவ்யூ செல்ல, அல்ட்ரா எட்ஜில் பேடில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், பந்து பேட்டில் பட்டதாக 3ஆவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார். இதனால் RR வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேட்ச் பிக்சிங் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
பொய்யான வழக்குகள் மூலம் அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதையே பாஜக செய்து வருவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். ஜார்க்கண்டில் பேசிய அவர், “ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டு, தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைத்திருப்பார், ஆனால், அதை ஹேமந்தின் மனைவி முறியடித்துள்ளார்” என்றார். ஹேமந்த சோரன் சிறைக்கு சென்ற பிறகு, அவரின் மனைவி கல்பனா அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, மீண்டும் இந்த ஜோடி இணைந்தால் நன்றாக இருக்கும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் 18 முறை டக்அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை RCB அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டக்அவுட்டானார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக்அவுட்டான தினேஷ் கார்த்திக்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா 17 முறை, பியூஷ் சாவ்லா 16 முறை டக்அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக பங்காளிகள் என்று சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அதானியிடம் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றார். தமிழகத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்ததில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி இருந்தது.
Sorry, no posts matched your criteria.