News April 28, 2024

T20 WC அணியில் சஞ்சு vs பண்ட்.. யார் உங்கள் சாய்ஸ்?

image

நேற்று நடந்த 2 IPL போட்டிகளில் ( LSG-RR, DC-MI) பண்ட், ராகுல், சஞ்சு, இஷான் கிஷன் என 4 விக்கெட் கீப்பர்கள் களமிறங்கினர். T20 WC அணியில் விக்கெட் கீப்பராக இடம்பெறபோவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிகளாக இது அமைந்தது. இதில் சஞ்சு கீப்பிங், பேட்டிங்கில் அசத்தினார். பண்ட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இருவரில் ஒருவர் T20 WC அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 28, 2024

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் நிலையில், தென் மாவட்டங்களில் வெயில் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அவ்வப்போது மழையும் பெய்வதால், குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

News April 28, 2024

நவ.20இல் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்

image

நடப்பு ஆண்டுக்கான செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நவ.20 முதல் டிச.15 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது. இத்தொடரை நடத்த குறைந்தபட்ச தொகையாக ₹68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விருப்பம் கோருவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது ஜூலையில் முடிவாகும் எனத் தெரிகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

News April 28, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை டீ

image

க்ரீன் டீயுடன் ஒப்பிடும் போது மாதுளை டீ மூன்று மடங்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த மாதுளைத் தேநீரை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் மாதுளை தோல், இஞ்சி, புதினா இலைகள் சேர்த்து நீரூற்றி 1 – 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுமாம்.

News April 28, 2024

மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு

image

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் 30ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின்போது, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங், ஒயினாம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்ததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்தது ஏன்?

image

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய பொது விநியோக திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளதாகவும், அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.40 கோடி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால்தான், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

திருமணத் தடை நீக்கும் செங்கமலத் தாயார்

image

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் ஆற்றோரத்தில் அமைந்த இக்கோவில், நடுநாட்டு திருப்பதி எனப் போற்றப்படுகிறது. சனிக்கிழமையில் விரதமிருந்து இங்கு வந்து பூ தீர்த்தத்தில் நீராடி, தேவநாத சமேத செங்கமலத் தாயாருக்கு வில்வம் சாற்றி வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

News April 28, 2024

IPL: புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா

image

DC-க்கு எதிரான நேற்றைய IPL போட்டியில், MI வீரர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் IPL வரலாற்றில் DC-க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ரோஹித்- 1032, கோலி- 1030, ரஹானே- 858, உத்தப்பா- 740, தோனி- 709 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News April 28, 2024

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்

image

ஆசிரியா் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சாா்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சாா்ந்த தணிக்கை தடைகளுக்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

இந்தோனேசியாவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவா தீவின் கடற்கரையில், 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 70 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

error: Content is protected !!