India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோஷியல் ஆடிட் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறதா, மன ரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்ததா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் சிசிடிவி கேமரா செயலிழந்திருப்பது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது. விஞ்ஞானம் அதிநவீனம் அடைந்திருக்கும் இந்தக் காலத்திலும் அதிவெப்பம் காரணமாக கேமரா செயலிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுவது ஏற்கும்படி இல்லை. இப்படியான சம்பவங்கள்தான் ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்குகிறது. உங்களது கருத்து என்ன?
ஹம்டார்ட் ஸ்குவாஸ்டர்ஸ் நார்த்தர்ன் ஸ்லாம் தொடரில் இந்திய வீரர்கள் அனாஹத், சுராஜ் குமார் கோப்பையை வென்றுள்ளனர். டெல்லியில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் அனாஹத் சிங் 2-0 என்ற நேர்செட் கணக்கில், தென் கொரியாவின் ஹவேயியாங்கை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுராஜ் 3-2 என்ற செட் கணக்கில் இலங்கையின் ரவிந்து லக் ஸ்ரீயை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் களம் பரபரப்பாக இருந்ததன் காரணமாக, ஆளுநர் வெளியே தெரியாமல் இருந்து வந்தார். தொடர்ந்து, வாக்குப்பதிவன்று தனது மனைவியுடன் சென்னையில் வாக்கு செலுத்தினார். இந்நிலையில், இன்று சொந்தக் காரணங்களுக்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடும் வெயிலால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நிலையில், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 40 – 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டாவில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் தெரிவித்துள்ளது.
‘வேட்டையன்’ படக்குழுவுக்கு லைகா புரொடக்ஷன்ஸ் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பட்ஜெட் கையை மீறிப்போவதாக, கணக்குகளுடன் ரஜினியைச் சந்தித்த தயாரிப்புத் தரப்பு, அவரிடம் முறையிட்டதாம். இயக்குநர் ஞானவேல், இதுவரைக்குமான ஷூட்டிங்கை சொன்ன பட்ஜெட்டுக்குள் முடித்ததை விவரங்களுடன் சமர்ப்பித்ததை அடுத்து, தற்போதைக்கு சிக்கல் ஓய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, மதுப்பிரியர்கள் பீர் வகைகளை நாட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதாரண நாள்களில் தினசரி 70 – 80 ஆயிரம் பீர் பெட்டிகள் வரை விற்பனையாவது, தற்போது கோடை காலத்தில் 1.30 லட்சம் பெட்டிகள் வரை விற்பனையாவதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் இந்திய வீராங்கனை ஜோதி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சீனாவில் நடந்த மகளிர் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோதி, அதிதி, பர்னீத் கூட்டணி 236-225 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி, தங்கம் வென்றது. அதே போல கலப்பு அணி & மகளிர் தனிநபர் ஆகிய இரு பிரிவுகளிலும் வென்ற ஜோதி, இத்தொடரில் மொத்தம் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார்.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை ₹3 உயர்ந்து, ₹119க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ ₹10 வரை உயர வாய்ப்புள்ளது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கடந்த சில நாள்களாக விலை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
திமுக, அதிமுக ஆட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் என்பது தீராத வியாதியாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு அருகே நெல் மூடைகளை விற்க லஞ்சம் கேட்ட அதிகாரிகளை, தட்டிக் கேட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், கொலை, கொள்ளை, போதை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி விவசாயிகள், கிளி ஜோதிடர்களை கைது செய்வதாக சாடினார்.
Sorry, no posts matched your criteria.