India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதனை உயர்த்துவதற்காக வாய் வழியாகக் கொடுக்கப்படும் கலவையே ORS (Orally Rehydrating solution) எனப்படுகிறது. வெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ORS பருகலாம். அதன்மூலம் நீர்ச்சத்து, சர்க்கரை சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் உடலில் சேர்கின்றன. கடும் வெயிலை சமாளிக்க ORS கலவையைத் தமிழக அரசு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ஒரே வாரத்தில் ₹1.30 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, எஸ்பிஐ வங்கியின் மூலதன மதிப்பு ₹45,158.54 கோடி உயர்ந்து, ₹7,15,218.40 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் மூலதன மதிப்பு ₹28,726.33 கோடி உயர்ந்து, ₹7,77,750.22 கோடியாக உள்ளது. அதேபோல், ஏர்டெல், ஐடிசி, எல்ஐசி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளது.
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், பிற்படுத்தப்பட்டோர் என்ற பெயரில் ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிராக பொய்யைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். பாஜக 400 தொகுதிகளில் வென்றால், இடஒதுக்கீடு இருக்காது என ராகுல் கூறியதாகக் குறிப்பிட்ட அவர், 2 முறை ஆட்சியில் இருந்தும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை என்றார்.
தமிழகத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து வயதினரும் ORS பருகலாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடலில் உப்புச்சத்து குறைவதை மீட்க ORS பயன்படுத்தப்படுவதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் 75 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சீனாவில் நடந்த ஆடவர் அணிகளுக்கான ரிகர்வ் பிரிவு போட்டியின் இறுதிச்சுற்றில் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் & பிரவீன் ஆகிய மூவர் அடங்கிய இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை 5-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 14 ஆண்டுகள் கழித்து, இப்பிரிவில் இந்திய ஆடவர் அணி, தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா பாஜக எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வல் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தனது மதிப்பைக் கெடுக்கவும், வாக்காளர்களின் மனதில் விஷத்தை விதைக்கவும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு உட்பட்ட அனைத்து இடஒதுக்கீட்டையும் ஆதரிப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் பரப்புரையில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்பதைப் போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறினார். அவை முற்றிலும் போலியானது என விளக்கம் அளித்த மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகக் கூறினார்.
DC அணியிடம் MI அணி தோற்றதற்கு திலக் வர்மாவின் சிறிய அஜாக்கிரதை தான் முக்கிய காரணம் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். போட்டி முடிந்தப் பின் பேசிய அவர், “8ஆவது ஓவரில் அக்சர் படேல் பந்து வீசியபோது, இடது கை பேட்ஸ்மேனான திலக் அதிரடியாக விளையாடினார். ரன் ரேட்டிங்கை உயர்த்திய அவர், கவனக்குறைவால் திடீரென ஆட்டமிழந்தார். அதன் பிறகு, ஆட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தோம்” என்றார்.
அனைவரும் வாக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்குமாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து பேசிய அவர், வாக்களிப்பது குறித்து அனைவரும் கருத்து மட்டும் கூறுவதாகவும், யாரும் வாக்களிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் குளறுபடி நடக்காமல் தேர்தல் ஆணையம் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட வாரியாக ₹500, ₹200 என பயிற்சிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இம்முகாமில் பங்கேற்கும் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் என்று கூறிய அவர், ஆர்வமுள்ள மாணவர்களை முடக்கிப்போடும் இச்செயலை உடனே கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.