India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணித்த ராகுல் காந்தி, இந்துக்களை வெறுக்கிறார் என எல்.முருகன் சாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுக்காலக் கனவு நிறைவேறியுள்ளது என்றார். மேலும், அந்தக் கோவிலுக்கு ஒருமுறை கூடச் சென்று வழிபாடு நடத்தாத ராகுல் காந்தி ராமரையும், இந்துக்களையும் வெறுக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது என விமர்சித்துள்ளார்.
கானா நாட்டைச் சேர்ந்த அபுபக்கர் என்ற இளைஞர், மரங்களைக் கட்டிப்பிடிப்பதில் புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். அலபாமாவில் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களைக் கட்டிப்பிடித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஒரு மரத்தை ஒருமுறை தான் கட்டிப்பிடிக்க வேண்டும், அப்போது மரத்திற்கும், அபுபக்கருக்கும் சேதம் எதுவும் ஏற்படக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்றுநேரத்தில் CSK பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 5 வெற்றிகளுடன் SRH 3ஆவது இடத்திலும், 4 வெற்றிகளுடன் CSK 6ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் டாடா கெமிக்கல்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட், பெடரல் வங்கி, இந்தியன் ஆயில், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், அதானி பவர், அம்புஜா சிமென்ட், கோல் இந்தியா, புளூ ஸ்டார், சவுத் இந்தியன் வங்கி, டாபர் இந்தியா, டைட்டன், எம்ஆர்எஃப், கோடக் பேங்க், ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 201 ரன்கள் இலக்கைத் துரத்தி ஆடிய RCB அணியில் தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளஸி 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் கூட்டணி சேர்ந்த ஜாக்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். கோலி 70*, ஜாக்ஸ் 100* அதிரடியால் RCB அணி 16 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியடைந்தது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரவு 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
இந்திய ஸ்பின்னர்கள் பந்தை ஸ்பின் செய்வதை விட வேகமாக வீசவே முயல்வதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஸ்பின் செய்யும் போதுதான் பந்து டீவியேட் ஆகி பேட்டரை ஏமாற்றி விக்கெட்டை பெற்று தரும் என்ற அவர், பந்தை வேகமாக வீசுவது பயிற்சியில் வீசப்படும் Throw Down-களுக்கு ஒப்பானது என்றார். மேலும், இந்திய பவுலர்கள் பேட்டர்களை ஏமாற்றும் வகையில் பந்தை ஸ்பின் செய்ய முயல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, இலவசத் தடுப்பூசியால் உயிர்கள் காக்கப்பட்டதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். பெதுல் என்னுமிடத்தில் பிரசாரம் செய்த அவர், கொரோனா காலத்தில் உலகமே நெருக்கடியைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், பாஜக அரசு இலவசத் தடுப்பூசி மற்றும் ரேஷன் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மக்கள் உயிரோடு இருக்கவே பிரதமர்தான் காரணம் என்றார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரன் மெஷின் விராட் கோலி அரை சதம் அடித்துள்ளார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 51* ரன்கள் அடித்துள்ளார். தற்போது வரை RCB 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. RCB வெற்றிபெற 103 ரன்கள் தேவை உள்ள நிலையில், கைவசம் இன்னும் 60 பந்துகள் உள்ளது. RCB வெற்றிபெறுமா?
தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அணைகளில் நீர் மட்டம் சரிந்துள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 42 அணைகளில் நீர் இருப்பு வெறும் 17 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 53.33 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) ஆகும். இந்த ஆண்டு, நீர் இருப்பு வெகுவாக சரிந்து தற்போது 8.86 பிசிஎம் நீர் மட்டுமே உள்ளது.
Sorry, no posts matched your criteria.