News April 28, 2024

அரை சதம் கடந்தார் ருதுராஜ்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிவரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். இவரது அதிரடியால் CSK 9 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 9 ரன்னில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ருதுராஜ் 51*, மிட்செல் 20* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று CSK எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?

News April 28, 2024

மோடி பொய் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்

image

மோடி கர்நாடகம் வரும் போதெல்லாம் பயங்கரமான பொய்களை பேசுவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களைத் தூண்டிவிட பிரதமர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என்று அவரால் மட்டுமே அபாண்ட பொய்களை கூற முடியும் என்றும் விமர்சித்தார். கர்நாடகாவில் மே 7இல் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

News April 28, 2024

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

image

காங்கிரஸ் ஆட்சியில் நம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தின் ஹூப்ளியில் உள்ள கல்லூரியில் மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இது காங்கிரஸ் கொள்கையின் காரணமாக ஏற்பட்ட விளைவு எனக் குற்றம் சாட்டினார். மேலும், வாக்கு வங்கியைக் காப்பாற்ற நினைக்கும் காங்கிரசால் மக்களைக் காப்பாற்ற முடியாது என சாடினார்.

News April 28, 2024

11 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ஜாக்ஸ்

image

ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக்கில் குஜராத் – பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த GT 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய RCB அதிரடியாக விளையாடியது. குறிப்பாக வில் ஜாக்ஸ் 11 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். 31 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவர், அடுத்த 10 பந்துகளில் 46 ரன்கள் குவித்து சதமடித்தார். இதனால் 16 ஓவர்களில் RCB அணி 206 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது.

News April 28, 2024

மோடியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக பிரேமலதா கருத்து

image

இஸ்லாமியர்கள் குறித்துப் பிரதமர் மோடி பேசியது தொடர்பாகப் பிரேமலதா கருத்துத் தெரிவித்துள்ளார். பிரதமரின் பேச்சை தேசமே உற்றுநோக்கும் நிலையில், ஏன் இது மாதிரியான கருத்தை பேசுகிறார் என்பதை மோடி விளக்க வேண்டும் என்ற அவர், இந்தியாவில் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்று தெரிவித்தார். மோடியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

புதிய சாதனை படைத்த கிங் கோலி

image

ஐபிஎல் தொடரில் அதிக முறை 500க்கும் அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னருடன், கோலியும் இணைந்துள்ளார். இருவரும் தலா 7 முறை 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளனர். அதைப் போல ஷிகர் தவானும், கே.எல் ராகுலும் தலா 5 முறை 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளனர். குஜராத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலி, 44 பந்துகளில் 70 ரன்களை அடித்து பெங்களூர் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

News April 28, 2024

ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்

image

மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது. இதனால் தான் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு குறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News April 28, 2024

7 இடங்களில் 40 டிகிரி செல்சியசைத் தாண்டிய வெயில்

image

தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியசைத் தாண்டிப் பதிவாகியுள்ளது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கரூர் (பரமத்தி), தருமபுரி, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. வரும் நாட்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News April 28, 2024

ராகுல் காந்தி இந்துக்களை வெறுக்கிறார்

image

ராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணித்த ராகுல் காந்தி, இந்துக்களை வெறுக்கிறார் என எல்.முருகன் சாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுக்காலக் கனவு நிறைவேறியுள்ளது என்றார். மேலும், அந்தக் கோவிலுக்கு ஒருமுறை கூடச் சென்று வழிபாடு நடத்தாத ராகுல் காந்தி ராமரையும், இந்துக்களையும் வெறுக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது என விமர்சித்துள்ளார்.

News April 28, 2024

மரங்களைக் கட்டிப்பிடிப்பதில் உலகச் சாதனை

image

கானா நாட்டைச் சேர்ந்த அபுபக்கர் என்ற இளைஞர், மரங்களைக் கட்டிப்பிடிப்பதில் புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். அலபாமாவில் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களைக் கட்டிப்பிடித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஒரு மரத்தை ஒருமுறை தான் கட்டிப்பிடிக்க வேண்டும், அப்போது மரத்திற்கும், அபுபக்கருக்கும் சேதம் எதுவும் ஏற்படக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!