News April 29, 2024

₹4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்றபோது, இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மே 2 ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

News April 29, 2024

‘சுந்தரா டிராவல்ஸ்’ பட நாயகி மீது புகார்

image

பிட்காயின் விவகாரத்தில் ‘சுந்தரா டிராவல்ஸ்’ பட நாயகி ராதா தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது. நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவர் கூறியதின் பேரில், அவரது நண்பரிடம் ராதா பிட்காயினில் ₹90,000 முதலீடு செய்ததாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை திருப்பித் தராததால் ஏற்பட்ட தகராறில், ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் முரளி கிருஷ்ணாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

News April 29, 2024

வீட்டில் உள்ள தங்கத்தை தேடப்போகிறார்கள்

image

காங்கிரஸ் அர்பன் நக்சல் சிந்தனை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். செய்தி ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் நாட்டை எக்ஸ்ரே கொண்டு பார்க்கும் என ராகுல் காந்தி சொல்வதன் அர்த்தம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தங்கத்தை எங்கே வைத்திருக்கிறார்கள் என ஆராயப் போகிறோம் என்பதே அதன் அர்த்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

News April 29, 2024

இசைக்குயிலின் பிறந்தநாள் இன்று!

image

தெளிவான தமிழில் ரிங்காரக் குரல் இனிமையால், நம்மை உணர்வின் ஆழத்திற்கு அழைத்து செல்லும் இசைக்குயில் ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் இன்று. வாலியில் தொடங்கி யுகபாரதி வரையிலான மூன்று தலைமுறை தமிழ்க் கவிஞர்களின் தமிழுக்கும், குரலால் இலக்கணம் சேர்த்தார். வண்ணமயமான ஆடைகள் அணிந்து, ஒப்பனையாக தோன்றினாலும் தனிமையிலும், மௌனத்திலும் உழன்று குரலை உருக்கி கொடுத்த அவரை இசையுலகம் என்றும் மறவாது!

News April 29, 2024

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

image

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 320 நாட்கள் சிறையில் இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பிலும், எம்எல்ஏவாக இருப்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பிலும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News April 29, 2024

விமர்சனங்களுக்கு வரலட்சுமி பதிலடி

image

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி திருமணம் செய்யவுள்ளார். சிகோலாய் சச்தேவ்வுக்கு திருமணமாகி, 15 வயதில் மகள் இருப்பதால் சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு பதில் அளித்துள்ள வரலட்சுமி, எதிர்மறையான கருத்துகளை பற்றி கவலையில்லை என்றார். தன் பார்வைக்கு நிகோலாய் அழகானவர் எனவும், தனது தந்தையும் 2ஆவது திருமணம் செய்தவர்தான் எனவும், அவர் கூறியுள்ளார்.

News April 29, 2024

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்.எல்.ஏ. பதவியில் தொடர்வதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டது ED.

News April 29, 2024

3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

image

தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 3 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, வெப்ப அலை வீசி வரும் நிலையில், மே 1 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு கடும் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட், ஆந்திரா, கர்நாடகாவுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

ஏற்றத்துடன் தொடங்கியது சந்தை

image

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை குறியீட்டெண் சென்செக்ஸ் (காலை 10.30 நிலவரப்படி) 531 புள்ளிகள் உயர்ந்து, 74,262 என்ற புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய குறியீட்டெண் நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து, 22,530 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. மற்ற துறை சார் குறியீடுகளும் ஏற்றத்தில் உள்ளன.

News April 29, 2024

ஊழலுக்கு எதிரான பாஜகவின் போர் வெல்லும்!

image

2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய, திறன்மிக்க, வளர்ந்த இந்தியாவை உருவாக்க பாஜக போராடிவருகிறது எனக் கூறிய ராஜ்நாத் சிங், ஊழலுக்கு எதிராக பாஜக அரசின் போர் வெல்லும் என்றார். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வறுமையை முழுமையாக ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!