India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய முக்கிய அணிகள் இல்லாததால் நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டி விறுவிறுப்பில்லாமல் நடந்து முடிந்தது. கடைசி நொடி வரை மைதானத்தின் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருந்தன. RCB vs CSK போட்டி ஜியோ சினிமா அப்ளிகேஷனில் 50 கோடி முறை பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய இறுதிப் போட்டி 25 கோடி முறை மட்டுமே பார்க்கப்பட்டது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ‘தி ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றவும் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியப் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றதற்கு அவ்வணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவருக்கு அணியின் உரிமையாளர் ஷாருக் கான் ப்ளாங்க் செக் கொடுத்ததாகக் கூட சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் வென்றபின் KKR வீரர்கள் கம்பீரை தோளில் தூக்கி மைதானத்தை சுற்றி வந்தனர். இந்நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
திருப்பூர் அருகே ஓட்டப்பாளையத்தில் விநாயகர் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் நிலம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டபோது, போதுமான நிலம் இல்லாததால் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் வழங்கினர். அத்துடன் கும்பாபிஷேக நாளன்று, சீர் வரிசை வழங்கியும், அன்னதானம் வழங்கியும் தங்கள் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதிப் போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஐதராபாத் (113/10) படைத்துள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியல் வருமாறு, * சென்னை சூப்பர் கிங்ஸ் 125-9 (மும்பைக்கு எதிராக 2013) * ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் 128-6 (மும்பைக்கு எதிராக 2017) * மும்பை இந்தியன்ஸ் 129-8 (சென்னைக்கு எதிராக 2017) * ராஜஸ்தான் ராயல்ஸ் 130-9 (குஜராத்துக்கு எதிராக 2022)
* பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின்தடை எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் RK சிங் பாராட்டு
* IPL வரலாற்றில் இறுதிப் போட்டியில் மிகக்குறைந்த ரன்கள் (113) எடுத்த அணி என்ற சாதனையைப் பதிவுசெய்தது SRH
* கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதை ‘All We Imagine As Light’ என்ற இந்திய திரைப்படம் வென்றது.
கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இணைந்தபின் KKR அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு KKR அணியின் ஆலோசகராக நீடிக்க கம்பீருக்கு, KKR அணியின் உரிமையாளர் ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இரு முறை KKR அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த கம்பீர் அணியில் இருப்பது அந்த அணிக்கு பலமே.
பெரும்பாலான ஹோட்டல்களில் வெள்ளை நிற பெட் ஷீட்கள், துண்டுகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், வெள்ளை நிறம் தூய்மையை உணர்த்துவதுடன், சுகாதாரத்துடன் இருப்பதையும் விருந்தினர்களுக்கு உணர்த்துகிறது. பிற நிற துணிகளுடன் சேர்த்து துவைக்கும்போது வெள்ளை நிற பெட்ஷீட்டில் சாயம் ஏற்படும். அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருந்தால் இந்த பிரச்னை தவிர்க்கப்படுவதுடன் ஊழியர்களுக்கும் துவைப்பதற்கும் எளிதாக இருக்கும்.
கங்குவா படத்தையடுத்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் விரைவில் படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நெல்லை அருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 4ஆம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்த மரண வலக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 32 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.