India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரும்பான்மைக்கு தேவையான 350 தொகுதிகளைக் கைப்பற்றுவதை நோக்கி INDIA கூட்டணி சென்று கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “6 கட்டங்களாக 486 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில், INDIA கூட்டணி பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பதவி விலகப்போகும் மோடி, தற்போது தனது ஓய்வுக்காலத் திட்டத்தை வகுத்து வருகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது. SRH அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ₹20 கோடிக்கு வாங்கப்பட்டார். கொல்கத்தா பவுலர் மிட்ச்செல் ஸ்டார்க் ₹24 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், இருவரும் தங்களது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்தனர். அவர்களுடன், மெக்கர்க், மார்ஷ், க்ரீன், ஸ்டோய்னிஸ், ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.
ஜார்க்கண்டின் தான்பாத் தொகுதிக்குட்பட்ட துண்டி கிராமத்தில் 40 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவின் ஒரு பகுதியாக நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த துண்டி கிராமத்தில் 1984ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் ஒரு சதவீத வாக்குக் கூட பதிவானதில்லை. இந்நிலையில், மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை (57%) ஆற்றியுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால், ஜூன் 14க்கு பிறகு செல்லாது என வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என UIDAI தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தில், ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டாலும் அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆதார் விவரங்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் நிரப்பப்படவுள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 8, 10, 12ஆம் வகுப்பு. ஊதியம்: ₹15,700/ – ₹71,900/-. கூடுதல் தகவல்களுக்கு <
ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கு பர்பிள் தொப்பியும் ரூ.10 லட்சமும் அளிக்கப்படும். அதன்படி, இந்தாண்டில் பஞ்சாப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகளை சாய்த்து 2ஆவது இடத்தில் இருந்தார். இதையடுத்து படேலுக்கு பர்பிள் தொப்பியும் ரூ.10 லட்சமும் அளிக்கப்பட்டது.
காசா பகுதியை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் ரபா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்றைய தாக்குதலில் மட்டும் ரபாவில் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக ரபாவில் இருந்து டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அவற்றை வானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
2024 ஐபிஎல்லில் 15 போட்டிகளில் 741 ரன்களை கோலி குவித்து, அதிக ரன் விளாசியோர் பட்டியலில் முதலாவதாக இருந்தார். 2ஆவது இடத்தில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (583 ரன்கள்) இருந்தார். இதனால் ஆரஞ்ச் தொப்பியுடன் ரூ.10 லட்சம் கோலிக்கு அளிக்கப்பட்டது. இதன்மூலம் 2ஆவது முறை ஆரஞ்ச் தொப்பி வென்ற இந்திய வீரர் என்ற சாதனை புரிந்தார். ஏற்கெனவே 2016இல் 973 ரன் குவித்து ஆரஞ்ச் தொப்பி பெற்றிருந்தார்.
IPL 2024 தொடர் நடந்து முடிந்திருக்கும் நிலையில் ‘Worst IPL’ என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நேற்றைய இறுதிப் போட்டி விறுவிறுப்பில்லாமல் இருந்ததால் அதிருப்தியில் ரசிகர்கள் இவ்வாறு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாதது ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர் உங்களுக்கு பிடித்திருந்ததா?
‘இந்தியன்-2’ படம் இந்த மாதம் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், ‘அதற்கு முன்பாகவே ‘இந்தியன்’ படத்தை ஜூன் 7ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் படத்தின் தொடக்கமாக இந்தியன்-2 இருக்கும் என்பதால் தற்போது ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.