India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடியை பரமாத்மா அனுப்பவில்லை. அம்பானி, அதானிகளுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்ததாக ராகுல் விமர்சித்துள்ளார். மற்றவர்கள் உயிரியல் ரீதியாக படைக்கப்பட்டிருந்தாலும் மோடி அப்படி அல்ல என கிண்டலடித்த அவர், உ.பி.யில் INDIA கூட்டணி க்ளீன் ஸ்வீப் அடிக்கும். அதன் பிறகு Goodbye பிஜேபி, Goodbye மோடி.. டாடா என்று சொல்லுவோம் எனத் தெரிவித்தார்.
ராகுல் ராணுவத்தில் சேவையாற்றிவிட்டு அக்னிபத் திட்டம் குறித்து பேசட்டும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம் என்ற ராகுல், இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல என்றார். இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதியாக வி.கே.சிங் இருந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையில், நாடு முழுவதும் ₹9000 கோடி மதிப்பிலான பணம், நகைகள், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 1 முதல் மே 18 வரை நடத்தப்பட்ட சோதனையில், 45% அளவுக்கு போதைப் பொருள்களும், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்றதாக ₹849.15 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ₹114.41 கோடியுடன் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், காம்பீர் பயிற்சியாளராக இருந்த KKR அணி, கோப்பையை வென்றது. இதையடுத்து, அவரிடம் பிசிசிஐ பேசி வருவதாக தகவல் வெளியிட்டுள்ள Cricbuzz, டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பிசிசிஐ அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு பயனாளிகளை தேர்வு செய்யும். குடிசை வீடுகள் சர்வே விவரங்களை வரும் 31ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல் ஜூன் 4க்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷா மாநிலத்தை ஆள வேண்டும் எனக் கேள்வி எழுப்பி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஒடிஷாவை சேர்ந்த இளம் முதல்வரை பிரதமர் மோடி உங்களுக்கு வழங்குவார் என்று தெரிவித்த அவர், பாக்., ஆக்கிரமிப்பு பற்றி பேசும் ராகுல், பட்நாயக்கிற்கு நான் சொல்கிறேன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது. அதை மீட்போம் என முழங்கியுள்ளார்.
ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை இணையதளம் மூலம் பெற வசதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல வளர்ச்சி திட்டங்களை முதல்வர் செய்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாள்கள் தியானம் செய்ய உள்ளார். விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31ஆம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் அவர், ஜூன் 1ஆம் தேதி வரை இரவு பகலாக தியானத்தில் ஈடுபடுகிறார். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பிரதமர் தியானம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை இடித்து விடும் என்று கூறுவது முட்டாள்தனமானது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சின் மூலம் தேர்தலில் வென்று விடலாம் என மோடி நினைப்பதாக குற்றம் சாட்டிய அவர், சமீபகாலமாக பிரதமர் மோடி நவீன கோயபல்ஸ் போல பேசி வருவதாக விமர்சித்தார். பரப்புரைகளில் மக்களால் நிராகரிக்கப்படும் மோடி, தன்னை கடவுள் என்பது அபத்தமானது என்றார்.
Sorry, no posts matched your criteria.