India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஏப்ரல் – 30, சித்திரை – 17 ▶கிழமை – செவ்வாய்
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM, 7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM
▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM
▶குளிகை நேரம்: 12:00 PM – 1:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: சப்தமி
▶நட்சத்திரம்: 4:09 AM வரை உத்திராடம் பிறகு திருவோணம்
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம், பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில், டெல்லி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துமாறும் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக அதிஷி தெரிவித்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2007இல் இந்திய அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய அவர், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 5 ஐபிஎல் கோப்பை, 3 இரட்டை சதம், அதிக சிக்சர்கள், உலகக் கோப்பையில் அதிக சதங்கள் என இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்லாத இவர், 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக நிச்சயம் பெற்றுத் தருவார்.
நடிகை அம்ரிதா பாண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போஜ்புரி, ஹிந்தி மொழிப் படங்களில் நடித்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பு தனது வாட்ஸ் அப்பில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதை ஸ்டேட்டஸ் மூலம் மறைமுகமாக பதிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
✍கடப்பதற்கு தடைகள் இல்லை என்றால், வாழ்க்கை உப்பு சப்பற்று போய்விடும். ✍செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம். ✍உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும். ஆனால், ஒடுக்கிவிட முடியாது. ✍அச்சம் போன்று மிக மோசமாக ஆபத்து எதுவுமில்லை. ✍துணிந்து செயல்படுபவர்கள் தான் வெற்றியின் சிகரத்தை எட்டுவார்கள். ✍பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது.
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பெற போலீசார் கைது செய்துள்ளனர். CSK-SRH இடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வந்த ரசிகர்களிடம், சிலா் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சரவணன், நவீன் குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை, வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் இதனை திருத்திக் கொள்ளுமாறும், பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 6 வாரங்களில் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி வழக்கை செப்.9ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
1900 – ‘ஹவாய்’ ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1945 – ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் ‘பாரத ஸ்டேட் வங்கி’ என மாற்றப்பட்டது.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா, இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவர், லக்னோவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.