India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் (₹1,215.79 கோடி) ஈட்டிய ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் முதல் இடம் பிடித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சுமார் 700 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் ₹12,020 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து, 2ஆவது இடத்தில் எழும்பூர் (₹564.17 கோடி), 3ஆவது இடத்தில் கோவை (₹324.99 கோடி) உள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனதாக காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காங்., தேர்தல் அறிக்கைக்கு இணையாகக் கூறப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லாததால், பாஜக தலைவர்களே அதைப்பற்றிப் பேசுவதில்லை எனக் கூறினார். மேலும், காங்., தேர்தல் அறிக்கையில் வேலை, வளர்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளதால் அனைவரும் இதைப் பற்றி பேசுகின்றனர் என்றார்.
மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடி ஒளிந்ததாகவும், காவலர்கள் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்தியா கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. தோனி ஓய்வு பெற்றபின் நிரந்தர விக்கெட் கீப்பர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில், KL ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களில் யாரை அடுத்த கீப்பராக தேர்வு செய்யலாம்? உங்களது கருத்தை சொல்லுங்க.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, அதிகளவில் தண்ணீர் குடிக்கவும், பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே தமிழர்கள் அதிகம் வாழும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. கடந்த 24ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என மாவோயிஸ்டுகள் எச்சரித்ததையடுத்து, அப்பகுதியில் அதிரடிப்படை சோதனை நடத்தி வந்தது. இதில் இன்று இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த நிலையில், மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.
நாடு முழுவதும் உள்ள 100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட சென்னை மற்றும் ஓசூரில் உள்ள பல தனியார் மருத்துவமனை உட்பட 100 இடங்களிலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரசின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், பாஜகவின் 10 ஆண்டுகால சாதனைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் கவனித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்த அவர், 60 ஆண்டுகளில் உலகம் பல்வேறு மாற்றங்களை கண்ட நிலையில், காங்கிரசுக்கு விவசாயிகளுக்கு தண்ணீரை கூட தர முடியவில்லை என்றார். மேலும், பல்வேறு நீர் பாசன திட்டங்களை காங்கிரஸ் கிடப்பில் வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார்.
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னமனூரில் உள்ள கம்மவார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பையும் மீறி, ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக TTV தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.