India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கை நாடாளுமன்ற முன்னாள் MP-யும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடைசி வரை குரல் கொடுத்தவருமான ‘தோழர் ஈழவேந்தன்’ கனடாவில் நேற்று காலமானார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டிய அவர், வயது மூப்பு காரணமாக காலமானார். ஈழவேந்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அளவிலான 67 செய்தித்தாள்களில் பொதுமன்னிப்புக் கோரி தந்த விளம்பரங்களின் விவரத்தை ஏன் முழுமையாக தாக்கல் செய்யவில்லை என்று பதஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாபா ராம்தேவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இணையத்தில் பதிவேற்றம் செய்தது சரியல்ல; அதனை ஏற்க முடியாது எனக் கூறினர்.
மார்க்ரம் தலைமையிலான 15 பேர் கொண்ட உலகக் கோப்பை டி20 அணியைத் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. அதில், பார்ட்மேன், கோட்சீ, டி காக், பஜோரன், ரீஜா ஹெண்ட்ரிக்ஸ், மார்க்கோ ஜான்சன், கிளாசன், கேசவ் மகாராஜ், மில்லர், ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், நோர்க்யா, ரிக்கெல்டன், சம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பைப் போட்டி ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் என இளைஞர்களுக்கு இயக்குநர் செல்வராகவன் அறிவுரை வழங்கியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்களை வலைத்தளங்களில் அவ்வப்போது பகிரும் அவர் தனது X பக்கத்தில், ‘ஐயோ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள்! புத்தி கெட்டுத் திரிந்தால்தான் புத்தி வரும்!’ எனப் பதிவிட்டுள்ளார்.
தேவ கவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களைப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கசிய விட்டது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன் 2000க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது.
நடப்பு ஐபிஎல் ப்ளே-ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர். இதனால், சாம் கரன், பட்லர், சால்ட், பேர்ஸ்டோ, மொய்ன் அலி உள்ளிட்ட வீரர்கள் வெளியேற உள்ளதால் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வாலை கைதுசெய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய ஆணையம் மவுனம் காப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தக் கூறிய மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாவதாக வேதனை தெரிவித்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பரத் தூதரான யுவராஜ் சிங்கிடம், அதில் கலந்துகொள்ளும் 20 அணிகளில் எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து அவர், “இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இந்த அணிகள் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் ஃபார்மில் உள்ளன” எனக் கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படம் குறித்து அண்மையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக ‘வாடிவாசல்’ இருக்கும் என்றார். ‘வாடிவாசல்’ நாவலில் திரைப்படமாகும் அந்தப் பகுதியை மட்டும் வெற்றிமாறன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்த அவர், சிறந்த நடிகரான சூர்யா இப்படத்திற்குப் பிறகு ஒரு லெஜெண்டாகி விடுவார் எனப் பாராட்டினார்.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.