News May 29, 2024

ஒரே நாளில் தமிழகம் வரும் மோடி, அமித் ஷா

image

பாஜகவின் முக்கியத் தலைவர்களான மோடி மற்றும் அமித் ஷா இருவரும் நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தர இருக்கின்றனர். 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கு தியானத்தில் ஈடுபடவுள்ளார். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் புதுக்கோட்டை திருமயம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார். தேர்தல் வெற்றிக்காக அமித் ஷா கடவுளை வழிபடவுள்ளார்.

News May 29, 2024

முதல் வாரம் மட்டுமே பாமாயில், பருப்பு பெறலாம்

image

இம்மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மே மாதத்திற்கான பங்கினை ஜூன் மாதத்திலும் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூன் முதல் வாரத்தில் மட்டுமே வாங்க முடியும் என்று அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. எனவே, முதல் வாரத்திலேயே போய் வாங்கிடுங்க மக்களே.

News May 29, 2024

நாட்டிலேயே டெல்லியில் அதிகபட்ச வெயில் பதிவு

image

தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் வட மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் (121.8 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தான் இந்த ஆண்டில் நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News May 29, 2024

டிக்கெட் விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை கோட்ட ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரம் மூலமான டிக்கெட் விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவியாளர் விற்பனை செய்யும் ஒரு டிக்கெட்டின் மொத்த மதிப்பில் 3% அவருக்கு ஊதியமாக வழங்கப்படும். இந்த பணியில் நியமிக்கப்படுபவர் ஓராண்டு காலம் பணியாற்றலாம். இதற்கு ஜூன் 11 ஆம் தேதிக்குள் <>http://sr.indianrailways.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News May 29, 2024

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை

image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 26ஆம் தேதி தவறி விழுந்ததில் அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று அறுவைச் சிகிக்சை நடைபெற உள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், வைகோ நலமுடன் வீடு திரும்புவார் என்ற அவர், உடல்நலம் குறித்து வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

News May 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்
* கட்டுமானத் துறைக்கு கடன் வழங்கும் வங்கிகள் 5% பாதுகாப்புத் தொகை தர வேண்டும் என RBI கூறியுள்ளது.
* தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்
* வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 1,433 ஊழியர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.

News May 29, 2024

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ?

image

‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திய இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் எடுக்கும் படத்திலும் பிரதீப் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘பிரேமலு’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 29, 2024

வடமாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை

image

வங்கக்கடலில் உருவான ராமெல் புயல் நேற்றுமுன்தினம் வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த பின்னும் அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News May 29, 2024

இந்த சாதனை விராட் கோலி வசமே உள்ளது

image

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை விராட் கோலி (14) வசமே உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல் (9), ரோஹித் ஷர்மா (9), ஜெயவர்த்தனே (7), தில்ஷன் (6), வார்னர் (6) ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சிறந்த ஃபார்மில் இருக்கும் விராட் கோலி மேலும் பல சாதனைகள் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 29, 2024

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை வரை கலந்தாய்வு

image

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேற்று முதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், நாளை வரை (மே 30) நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 10 – 15 மற்றும் ஜூன் 24 – 29 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

error: Content is protected !!