News May 29, 2024

இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு

image

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு ஆகிய போட்டிகள் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 29, 2024

பாஜகவில் உள்ள குழப்பத்தை திசை திருப்பும் அண்ணாமலை?

image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத் தலைவர் என அண்ணாமலை திடீரென கூற 2 காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒன்று, அதிமுகவில் உள்ள இந்துசார்பு தலைவர்கள், வாக்குகளை பாஜக பக்கம் கொண்டு வருவதற்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இரண்டாவதாக, தேர்தலைத் தொடர்ந்து தமிழக பாஜகவில் நிலவும் குழப்பங்களை திசை திருப்புவதற்காக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

News May 29, 2024

கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிப்பு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தேர்தலைக் காரணம் காட்டி ஜூன் 2 வரை ஜாமின் பெற்றார். இந்நிலையில், மேலும் 7 நாள்களுக்கு ஜாமினை நீட்டிக்கக்கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் விசாரணையில், கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் படி கூறி அவர் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

News May 29, 2024

சிகிச்சைக்கு வந்தவர் அடித்துக்கொலை

image

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. KMCH மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளைத் திருட முயன்றதாக ராஜா என்பவரை ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை திருட வந்ததாகக் கருதி அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

News May 29, 2024

பேடிஎம் பங்குகளை வாங்குகிறார் அதானி

image

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக அதன் நிர்வாக இயக்குநர் விஜய் சேகர் சர்மாவிடம் தொழிலதிபர் கவுதம் அதானி பேச்சுவார்தை நடத்தி வருகிறார். இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவடைந்தால், கூகுள் பே, போன் பே-ஐ எதிர்த்து அதானி களம் காண்பார் எனத் தெரிகிறது. முன்னதாக, விதிகளை மீறியதற்காக பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் ஈடுபட பேடிஎம் நிறுவனத்திற்கு அண்மையில் ஆர்பிஐ தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

News May 29, 2024

10 ஓவர்களிலேயே போட்டியை முடித்த ஆஸ்திரேலியா

image

நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய நமீபியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 119/9 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி., அணி, 10 ஓவர்களிலேயே (123/3) இலக்கை அடைந்து மகத்தான வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54*, டிம் டேவிட் 23 ரன்களும், ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

News May 29, 2024

அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்காத இபிஎஸ்

image

ஜெயலலிதாவை இந்து தலைவர் என அண்ணாமலையும், தமிழிசையும் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த கருத்துக்கு இபிஎஸ் பதிலடி தந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர். இபிஎஸ் தொடர்ந்து மவுனம் காக்கிறார். இதைக் கண்ட அதிமுகவினர், பதிலடி தர இபிஎஸ் பயப்படுகிறாரா? என கேள்வி எழுப்புவதாகக் கூறப்படுகிறது.

News May 29, 2024

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்கலாமா? கூடாதா?

image

முன்பதிவு செய்தபோது வரும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் ரயிலில் பயணிக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. டிக்கெட் கவுண்டரில் தரப்படும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்க முடியும். ஆனால் ஆன்லைன் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்க முடியாது. அதை மீறி பயணித்தால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிப்பவராகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்க ரயில்வே விதி வழிவகுத்துள்ளது.

News May 29, 2024

வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டது

image

சென்னையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ₹102.20க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி ₹87.50க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, ஒரே மாதத்தில் ₹14.7 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

News May 29, 2024

பாஜகவுடன் கூட்டு இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா

image

ஜெயலலிதா பற்றி தவறான தகவல்களை கூறுவதை ஏற்க முடியாது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜகவினர் தேவைக்கு தங்களை பயன்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், தான் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டு இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா என்று நினைவுகூர்ந்தார். அத்துடன், இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!