India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்னிபத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு விளையாடி வருவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தில் புதிய ஆள்சேர்ப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 46 ஆயிரமாக குறைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது என்றார். காங்கிரஸ் ஆட்சியில் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார்.
அடிப்படை கண்ணீரில் ஒருவகை எண்ணெய், நீர், உப்பு இருக்கும். இது கண்களில் ஏற்படும் தொற்றை சரி செய்யும் தன்மையுடையது. வெங்காயம் வெட்டுதல், புகை போன்ற புற காரணத்தால் வரும் கண்ணீர், கண்களை சுத்தப்படுத்தும் தன்மையுடையது. உணர்ச்சி வசப்படுகையில் வரும் கண்ணீரில் அதிக அழுத்தங்கள், இயற்கை வலி நிவாரணி இருக்கும். இது உங்களை சோகம், துக்கத்தில் இருந்து விடுபடச் செய்யும் எனக் கூறப்படுகிறது.
துக்கம், பயம், மகிழ்ச்சி ஆகிய நேரங்களில் கண்களில் நீர் பெருக்கெடுக்கும். அப்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒருபகுதி, கண்ணீரை கட்டுப்படுத்தும் மூளையின் இன்னொரு பகுதியான லிம்பிக்கிற்கு சிக்னல் கொடுக்கும். அது நரம்பு மண்டலத்தை தூண்டி, கண்களில் நீரை வரச் செய்யும். இதுபோன்ற அழுகையின்போது, கண்களுக்குள் சேமித்து வைப்பதைக் காட்டிலும் அதிக நீர் சில நிமிடங்களிலேயே வழிந்தோடும்.
கண்களில் இருந்து 3 வகையான நீர் வருவதுண்டு. தூசி போன்றவை கண்ணில் விழும்போது உண்டாவது அடிப்படை கண்ணீர். இதனால் கண், தன்னைத் தானே சரிப்படுத்தி கொள்ளும். இன்னொரு வகை கண்ணீர், வெங்காயம் வெட்டுதல், புகை உள்ளிட்ட வெளிப்புற எரிச்சலால் வருவது. மூன்றாவது, துக்கம், பயம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகரமான நேரத்தில் வரும் நீர். இதுவே அழுகை எனப்படுகிறது. இதற்கான மருத்துவ காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.
தன்னை பரமாத்மா தான் பூமிக்கு அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, ஒருவர் தன்னை தானே கடவுள் என்பதாகவும், மற்றொருவர் ஜெகன்நாதரே அவரின் பக்தர் என கூறுவதாகவும் சாடினார். கடவுள் என்றால் அரசியல் செய்யக் கூடாது, கலவரத்தை தூண்டக்கூடாது என்று கூறிய அவர், அவருக்கு தாங்கள் கோவில் கட்டித் தருவதாகவும், நாட்டை தொந்தரவு செய்யாமல் அங்கேயே இருக்குமாறும் விமர்சித்தார்.
குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள ‘வெப்பன்’ (Weapon) திரைப்படம், வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் அதிரடி ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், சத்யராஜ் முதல்முறையாக சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை இன்னும் சில நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளன. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்க காசா, ரஃபா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டிக்கவும், அழுத்தம் தரும் வகையிலும் பாலஸ்தீனத்தை ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகியவை தனிநாடாக அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் ஐநா உறுப்பு அந்தஸ்து பெற்ற 193 நாடுகளில், பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 146ஆக உயர்ந்துள்ளது.
மேற்குவங்கத்தில் குடியேறும் ஊடுருவல்காரர்களுக்காக, சிஏஏ சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அண்டை நாட்டில் இருந்து ஊடுருவும் நபர்கள், மேற்குவங்க இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்வதாகவும், அவர்களால் அம்மாநில எல்லை மாறுவதை கண்டு ஒட்டுமொத்த நாடும் கவலையடைந்து இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, ரஃபா நகரின் மையப் பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதால், அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்றனர். நேற்று முன்தினம், ரஃபாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக, கிடைக்கும் வாகனங்களில் ஏறி பாலஸ்தீனர்கள் அங்கிருந்து
வெளியேறி வருகின்றனர்.
மே 31ஆம் தேதி மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில் ₹99 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றன. திரைப்படக் காதலர்களுக்கு இந்த சலுகை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.