News May 1, 2024

உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழகம்

image

கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். என்றாவது ஒருநாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கர்நாடகா கூறியுள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்றே கூறும் என சாடினார். தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என ஒழுங்காற்றுக் குழுவிடம் கர்நாடகா நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

ஏப்ரலில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவு

image

தென்னிந்தியாவில், 51 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது. அதாவது, மார்ச்சில் தென்னிந்தியாவின் அதிகபட்ச வெயிலின் சராசரி 37.2 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 2016 ஏப்ரலில் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவான நிலையில், தற்போது 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை ஆலப்புழாவில் வாழ்நாள் உச்சமாக 38.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.

News May 1, 2024

ஆந்திராவில் பாஜக கூட்டணியில் விரிசல்

image

மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கும் ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக -ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நேற்று தெ.தேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பாஜக பொறுப்பாளர் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்துவிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகளில் உடன்பாடு இல்லாததால் பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News May 1, 2024

டி20 WC: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

image

மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியைத் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதில், கம்மின்ஸ், ஆகர், டிம் டேவிட், எல்லிஸ், கிரீன், ஹேசில்வுட், ஹெட், இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், வேட், வார்னர், ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித், மெக்குர்க் போன்ற வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

ரிங்குவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சித்து

image

தோனி விட்டுச் சென்ற ஃபினிஷர் இடத்தை நிரப்ப ரிங்கு சிங்தான் தகுதியானவர் என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபினிஷராக அறியப்படும் ரிங்கு சிங், டி20 தொடருக்கான ரிசர்வ் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அணியில் மாற்றங்களுக்கு இம்மாதம் 25ஆம் தேதி வரை வாய்ப்புள்ளதால், ரிங்கு சிங்குக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

News May 1, 2024

2 ஆண்டுகளில் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள்

image

பாஜக ஆட்சியில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் பிரசாரம் செய்த அவர், சத்தீஸ்கரின் சில பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாகவும், அவர்களைக் களையெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மோடி 3ஆவது முறையாகப் பிரதமரானால், அடுத்த 2 ஆண்டுகளில் நக்சல்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

News May 1, 2024

இன்று மே தின விடுமுறை

image

ஒவ்வொரு ஆண்டும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், தொழிலாளர் இயக்க பங்களிப்புகள் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது. 1967ல் அப்போதைய முதல்வர் அண்ணா, நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் மே 1-ஐ அரசு விடுமுறையாக அறிவித்தார். 1990 முதல் மத்திய அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்கள் முதல் அமைப்புசாரா தொழிலாளர்கள் வரை இன்று விடுமுறையாகக் கடைபிடிக்கின்றனர்.

News May 1, 2024

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு

image

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து, ₹63,090 கோடியில் இருந்து, ₹75,470 கோடியாக அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் தேவையைப் பொறுத்தமட்டில், 4% அதிகரித்து 95.5 டன்னாகவும், முதலீடு 19% அதிகரித்து 41 டன்னாகவும் இருந்தது. இதில், RBI 19 டன் தங்கம் வாங்கியுள்ளது.

News May 1, 2024

வெள்ளைப்பூசணி மோர் சர்பத் செய்வது எப்படி?

image

வெயிலில் ஏற்படும் திடீர் மாரடைப்பு பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் வெள்ளைப்பூசணிக்கு உண்டாம். கோடையில் அதிகமாக கிடைக்கும் பூசணியில் மோர் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். நறுக்கி எடுத்த வெள்ளைப்பூசணி, இஞ்சி, கொத்தமல்லி, நெல்லி, கற்றாழை, மிளகாய், பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் மோரை ஊற்றினால் சுவையான வெள்ளைப்பூசணி மோர் சர்பத் ரெடி.

News May 1, 2024

துபே தாக்கத்தை ஏற்படுத்துவார்: ப்ளெமிங்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் ஷிவம் துபே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று CSK அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷிவம் துபே குறித்து பேசிய அவர், எதிரணியின் ஆட்டத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதில், துபே முழுமையான வீரராக திகழ்கிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்” எனக் கூறினார்.

error: Content is protected !!