India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன், 1929 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டோடு, வாடிகன் உருவாக்கப்பட்டு 95 ஆண்டுகளாகும் நிலையில், அங்கு இன்று வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. அங்கு வரும் பெண்கள் கர்ப்பம் தரித்தது தெரிந்த உடனேயே, பிரசவம் முடிந்து குழந்தை பிறக்கும் வரை இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்படுவது கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு இதுவரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 20 ஆயிரம் 4ஜி டவர்களை அமைத்து, 4ஜி சேவைகளை முழு வீச்சில் வழங்க பிஎஸ்என்எல் ஆயத்தமாகி வருகிறது. மேலும் 3,500 டவர்களை அமைத்து பஞ்சாப், ஹரியானா ஹிமாச்சல் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் ஆரம்பகட்டமாக 4ஜி சேவை அளித்து வருகிறது. அங்கு அந்த சேவையை 8 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை குப்பையான தேர்வு என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “சிலரை திருப்திப்படுத்த தேர்வுக்குழு இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. அதற்காக, நியாயமற்ற காரணத்தை சொல்லி ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கியுள்ளது. தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்தியாவுக்காக ரிங்கு அசத்தியவர்” எனக் கூறினார்.
ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்காடு மலைப்பாதையில் நேற்று நடைபெற்ற கோர விபத்தில், 6 பேர் பலியானார்கள். காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்ரெஜ் பங்கு பிரிப்புக்குப் பிறகு, ஜம்ஷித் மற்றும் ஸ்மிதா ஆகியோருக்கு சந்தையில் பட்டியலிடப்படாத கோத்ரெஜ் எண்டர்பிரைசஸான கோத்ரெஜ் மற்றும் போய்ஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்கள் வழங்கப்படவுள்ளன. இதன் தலைவராக ஜம்ஷித் கோத்ரெஜ் இருப்பார். அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் நைரிகா ஹோல்கர் நிர்வாக இயக்குநராக இருப்பார். மேலும், மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பிரதான சொத்துகளையும் அவர்கள் பெறவுள்ளனர்.
டெல்லி போலீசாரின் சம்மனுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆஜராகமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து அவதூறு பரப்பியதாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வரின் வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். இந்த வீடியோவை பரப்பியதாக சிலர் கைதான நிலையில், தன்னையும் கைது செய்ய முயற்சி நடப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு 2 முதல் 4°C வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-42°C-ஐ ஒட்டி இருக்கக்கூடும் என்றும், மே 4, 5ஆம் தேதிகளில் வெப்பநிலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40°C ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பணத் தேவைக்காக பகுதிநேர வேலை செய்கின்றனர். அவர்கள் இனி வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் 24 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால், வேலை செய்யும் நோக்கத்தோடு கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் கூறி அரசு இந்த விதியை அரசு மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரெஜ் குழுமம், 2ஆக பிரியவுள்ளது. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் ஆகியோரும், கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தை ஜம்ஷித் கோத்ரெஜ், ஸ்மிதா ஆகியோரும் நிர்வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருட பங்கு உரிமைப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. செபி ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான மற்ற பணிகள் தொடங்கும்.
குஜராத் மாநிலம் அல்தான் பகுதியில் 50 மாணவர்களுடன் பயணித்த தனியார் பள்ளிப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பேருந்தில் இருந்த 1 – 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயத்தில் அலறிய நிலையில், சிலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஓட்டுநர் மதுபோதையில் இருப்பது அறிந்ததை அடுத்து, 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஓட்டுநரை வலுக்கட்டாயமாகப் பேருந்தை நிறுத்தச் செய்து மாணவர்களைக் காப்பாற்றினார்.
Sorry, no posts matched your criteria.