News May 1, 2024

ஒரே நாளில் 45.43 கோடி யூனிட் மின் நுகர்வு

image

தமிழகத்தின் மின் நுகர்வு இதுவரை இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. கோடை வெயிலால் வீட்டில் உள்ள மக்கள் ஏசி, ஃபேன் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் நாள்தோறும் மின் நுகர்வு அதிகரித்து வரும் சூழலில், நேற்று ஒரே நாளில் 45.43 கோடி யூனிட் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கோடைகாலம் முடியும் வரை மின் நுகர்வு அதிகரிக்கும் எனவும் மின்சார வாரியம் கூறியுள்ளது.

News May 1, 2024

கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

image

கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடக்கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அந்த மருந்தை தயாரித்த ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது குறிபிப்பிடத்தக்கது.

News May 1, 2024

செல்போனில் பேசும்போது சத்தம் கேட்கவில்லையா?

image

செல்போனில் பேசுகையில் போதிய சத்தம் வரவில்லையெனில், சர்வீஸ் சென்டருக்கு செல்லாமல் வீட்டிலேயே சரி செய்ய முடியும். செல்போன் செட்டிங்ஸ் சென்று, Sound & Vibration விருப்பத்திற்குச் செல்லவும். அதில் Sound Quality இருக்கும். இதில், Dolby Atmos ஆப்ஷன் என்பதை ஆட்டோ மோட்டில் அமைத்துவிட்டு, Adapt Sound ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். பின்னர், ‘over 60 years old’ என்று அமைத்தால் அதிக ஒலி வரும்.

News May 1, 2024

பொருளாதார உறவை மேம்படுத்த முடியாது

image

இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இலங்கை ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் முன்னேற்றத்தை எட்ட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை” எனக் கூறினார்.

News May 1, 2024

சல்மான் வீடு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்கொலை

image

நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார். மும்பையில் உள்ள சல்மான் வீட்டின் சுற்றுச்சுவரில் சில நாட்களுக்கு முன்பு 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுதொடர்பாக கைதான அனுஜ், மும்பை சிறப்புப் படை போலீசாரின் விசாரணையில் இருந்தபோது தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 1, 2024

டெலிகாம் நிறுவனங்களுக்கு EC அறிவுறுத்தல்

image

வாக்குப்பதிவு குறைந்ததையடுத்து, மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை EC அறிவுறுத்தியுள்ளது. 2 கட்டத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு குறைந்ததையடுத்து, அதை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து EC ஆலோசித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக டெலிகாம் நிறுவன அதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை EC வழங்கியுள்ளது.

News May 1, 2024

தமிழக அரசின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும்

image

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என்றார்.

News May 1, 2024

வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் இரங்கல்

image

விருதுநகர் அருகே தனியார் வெடிபொருள் கிடங்கில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து குறித்த செய்தியறிந்ததும் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

News May 1, 2024

ஸ்ட்ராங் ரூம் கேமராக்கள் மட்டும் செயலிழப்பது எப்படி?

image

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பது தொடர்பாக டி.ஜெயக்குமார் சந்தேகம் எழுப்பியுள்ளார். தனது வீட்டில் உள்ள 26 கேமராக்களும் ஒருநாள் கூட செயலிழந்தது கிடையாது என்ற அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தில் மட்டும் கேமராக்கள் செயலிழப்பது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, தேனி தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

மே 7ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மே 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சிலப் பகுதிகளில் மிதமான மழையும், மே 3- 5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 6, 7இல் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!