News May 1, 2024

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நெல்சன்

image

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன். விஜய்யை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் படங்களை இயக்கிய இவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். ‘ஃபிளமண்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதை அறிவித்துள்ள அவர், மே 3 ஆம் தேதி தான் தயாரிக்கும் முதல் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் CSK

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ், ரஹானே பொறுமையாக ஆடிவந்தனர். ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் அதே ஓவரில் 3ஆவது பந்தில் தூபே ரன்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா(2) LBW முறையில் ஆட்டமிழந்தார். CSK 10 ஓவரில் 71/3 ரன்கள் எடுத்துள்ளது.

News May 1, 2024

திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி நீக்கம்

image

திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு உடன்படாத காரியங்களில் அவர் ஈடுபட்டதால் அவர் வெளியேற்றப்படுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கொல்கத்தா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் தபஸ் ராயுடன் குணால் கோஷ் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரைப் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

தேர்தலில் வெற்றி பெற பாஜக எதையும் செய்யும்

image

தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என மம்தா தெரிவித்துள்ளார். முதல் 2 கட்ட வாக்கு விகிதம் திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய அவர், தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றா? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார். மே.வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

News May 1, 2024

சமையல் சிலிண்டர் பயன்பாடு 12% அதிகரிப்பு

image

நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் அதன் பயன்பாடு 2.67 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், ஏப்ரலில் 2.45 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2023 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 12% உயர்ந்துள்ளது. மேலும், 2020 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 26.9%, கடந்த 2022 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 9% அதிகரித்துள்ளது.

News May 1, 2024

15 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம், கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் இன்று 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கரூர் பரமத்தியில் 44 டிகிரி செல்சியஸ் வெயிலால் மக்கள் அவதியடைந்தனர்.

News May 1, 2024

9ஆவது முறையாக டாஸில் தோல்வி

image

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், 10 போட்டிகளில் இதுவரை 9 முறை டாஸில் தோற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனது டாஸ் சாதனையை பார்த்த CSK வீரர்கள், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் செய்யத் தயாராகிவிட்டதாக நகைச்சுவையாகத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்

News May 1, 2024

APPLY NOW: நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்கள்

image

சென்னை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக பணியாளர், ஓட்டுநர் என மொத்தம் 125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 ஆம் தேதி கடைசித் தேதியாகும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ₹500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, SCA பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மேலும் தகவல்களுக்கு <>www.mhc.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தை அணுகவும்.

News May 1, 2024

12.3% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

image

நாடு முழுவதும் கடந்த மாதம் பெட்ரோல் விற்பனை 12.3% அதிகரித்துள்ளது. கடந்த 2023இல் ஏப்ரல் மாதம் பெட்ரோல் விற்பனை 2.65 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், 2024இல் ஏப்ரல் மாதம் 2.97 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், டீசல் விற்பனை 2.3% சரிந்து 7 மில்லியன் டன்னாக இருந்தது. தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதே பெட்ரோல் தேவை அதிகரித்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

News May 1, 2024

DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்

image

அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்கவுள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 50%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் சலுகை, விடுதி கட்டண சலுகை 25% உயருகிறது. குழந்தை கல்வி சலுகையாக மாதம் ₹2812.5, விடுதி கட்டண சலுகையாக ₹8437.5, திவ்யாங் குழந்தை பராமரிப்புக்கு ₹5625 பெறுவர்.

error: Content is protected !!