News May 1, 2024

ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

image

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளார்.

News May 1, 2024

சுஸுகி ஹயபுசா வெள்ளி விழா எடிஷன்

image

ஹயபுசா மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் விதமாக வெள்ளிவிழா எடிஷனை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கருப்பு & ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த நான்காம் தலைமுறை மாடலில் முப்பரிமாண லோகோ இடம்பெற்றுள்ளது. லிக்விட் கூல்டு, 1,340 சி.சி. திறனை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர், பியூயல் இன்ஜெக்‌ஷன் டி.ஓ.ஹெச்.சி என்ஜினைக் கொண்ட இதன் விலை ரூ.17.70 லட்சமாகும்.

News May 1, 2024

பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக ருதுராஜ் 62, ரஹானே 29, ரிஸ்வி 21 ரன்கள் எடுத்தனர். கடைசியில் களமிறங்கிய தோனி 14 ரன்கள் எடுத்தார். இதையடுத்து PBKS அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PBKS தரப்பில் ஹர்ப்ரீத், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

News May 1, 2024

19 மாவட்டங்களில் நாளை வெயில் கொளுத்தும்

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரிப்பதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, தி.மலை மாவட்டங்களில் நாளை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News May 1, 2024

தாத்தா வீட்டில் வசிக்கும் ஆனந்த் மகிந்திரா

image

மகிந்திரா குழும சொத்து மதிப்பு ₹1.50 லட்சம் கோடியாகும். அந்நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திராவின் சொத்து மதிப்பு மட்டும் ₹17,000 கோடி ஆகும். பெரும் கோடீஸ்வரரான ஆனந்த் மகிந்திரா, ஆடம்பர பங்களாவில் வசிக்காமல், தனது தாத்தா கே.சி. மகிந்திரா மும்பையில் முன்பு வாடகைக்கு இருந்த வீட்டை வாங்கி வசித்து வருகிறார். தாத்தா வாழ்ந்த வீடு என்பதற்காக ₹270 கோடிக்கு வீட்டை அவர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

சாலையோர உணவகங்களில் பூனைக் கறி

image

சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக, பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும்போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளை பிடித்துச் செல்வதாகவும், அவர்களை விசாரித்தபோது ₹100க்கு விற்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனால், சாலையோர உணவகங்களில் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

News May 1, 2024

கோவின் சான்றிதழ்களில் இருந்து மோடி படம் நீக்கம்

image

கொரோனா தடுப்பூசி போடுகையில் அளிக்கப்படும் கோவின் சான்றிதழ்களில் இருந்து மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவோருக்கு அளிக்கப்படும் அந்த சான்றிதழில் மோடி படத்துடன் ‘இந்தியா ஒன்றிணைந்து கொரோனா-2019ஐ தோற்கடிக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தற்போது, அந்த வாசகம் மட்டும் சான்றிதழில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

முறையான தூக்கம் இருதயத்தை பாதுகாக்கும்

image

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது, நிம்மதியான தூக்கம், போதுமான தூக்கம் ஆகியவை இருதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு 10 முதல் காலை 6 மணி வரை தினமும் முறையாக கடைபிடித்தால் பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம் என்கிறது ஆய்வு. நீங்கள் முறையாகத் தூங்குகிறீர்களா?

News May 1, 2024

ஆமை வேகத்தில் அரை சதம் அடித்த ருதுராஜ்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பொறுமையாக பேட்டிங் செய்துவரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகள் சரியத் தொடங்கியதால் பொறுமையாக ஆடிவந்த அவர், 44 பந்துகளில் 55* ரன்கள் அடித்துள்ளார். தற்போது, CSK 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. இன்று CSK எவ்வளவு ரன்கள் எடுக்கும்.?

News May 1, 2024

இக்கட்டான காலங்களில் ராகுல் இத்தாலிக்கு ஓடி விடுவார்

image

நாடு பிரச்னைகளை சந்திக்கும் நேரத்தில் எல்லாம் இத்தாலிக்கு ராகுல் முதல் ஆளாக ஓடி விடுவார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாட்டில் கொரோனா பரவியபோது, இத்தாலிக்கு ராகுல் ஓடி விட்டதாகவும், நிலநடுக்கம், வெள்ளம் ஏற்பட்டபோதும் இத்தாலிக்கு சென்று விட்டதாகவும் கூறினார். வெளிநாட்டில் இருக்கும்போது கூட இந்தியாவை ராகுல் விமர்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!