India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். நேற்றைய போட்டியுடன் முஸ்தஃபிசூர் ரகுமான் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது CSK அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
மே 10ஆம் தேதி தொடங்கும் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வருமாறு, நகை கடைகள் வீடு வீடாக சென்று அழைப்புக் கொடுத்து வருகின்றனர். வேகமாக அதிகரித்து வந்த தங்க விலை, தற்போது சரியத் தொடங்கியுள்ளதால் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகை வாங்கினால், தங்க நாணயம் இலவசம், கிராமுக்கு ரூ.500 குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடவுள் அதிக மழையை தருகிறார், ஆனால் அதை சேமிக்கும் திறன் தமிழக அரசிடம் இல்லையென பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோடைக் காலத்தில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்பது என்பது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது என்றும், தண்ணீர் வரும்போது வீணாக கடலில் கலக்க விடுவதும், பின்னர் தண்ணீர் இல்லை என்பதும் தொடர் கதையாக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
▶சுந்தர் சி, தமன்னா, யோகி பாபு, ராஷி கண்ணா நடித்த ‘அரண்மனை 4’, சாய் தன்ஷிகா, மைம் கோபி நடித்துள்ள ‘தி ப்ரூஃப்’, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’ ஆகிய 3 திரைப்படங்கள் மே 3ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. ▶அதேபோல், கவினின் ‘ஸ்டார்’, சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’, அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’, அமீரின் ‘உயிர் தமிழுக்கு ஆகிய 4 திரைப்படங்களும் மே 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன.
▶மே – 2, சித்திரை – 19 ▶கிழமை – வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM
▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM
▶குளிகை நேரம்: 9:00 AM – 10:30 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶திதி: நவமி
▶நட்சத்திரம்: 1:49 AM வரை அவிட்டம் பிறகு சதயம்
லக்னோ அணியின் நட்சத்திர பவுலர் மயங்க் யாதவ், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. GT-க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில ஆட்டங்களை தவறவிட்ட அவர், நேற்று முன்தினம் MI-க்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அப்போது மீண்டும் காயம் ஏற்பட, போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு வயிற்று பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
▶தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ▶ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால், அதில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். ▶வேறுவொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும். ▶முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.
காலாவதியான அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பாதுகாப்பில்லாத பேருந்து பயணங்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்றும், பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
✍நேரம் தவறாமல் இருப்பவர் என்றும் கதாநாயகன் தான். ✍நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமம். ✍பணம் இருந்தால் தான் மரியாதை என்றால், அந்த மரியாதையே தேவையில்லை. ✍ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது, குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதற்கு சமம். ✍சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும். ✍எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.
CSK அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி, புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில், CSK-க்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த MI அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் CSK அணியைத் தொடர்ச்சியாக வீழ்த்தியுள்ளன. மே 5ஆம் தேதி நடைபெறும் அடுத்தப் போட்டியில், MI-இந்த சாதனையை பஞ்சாப் அணி முறியடிக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Sorry, no posts matched your criteria.