News May 2, 2024

சடங்குகள் இல்லாத திருமணம் அங்கீகரிக்கப்படாது

image

சடங்குகள் இல்லாத இந்து திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சடங்குகள் இன்றி திருமணம் செய்து கொண்ட இருவர், விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சடங்கு இல்லாமல் நடந்த திருமணத்துக்கு, திருமணச் சான்றிதழ் அந்தஸ்து அளிக்காது என்றும், இந்து திருமண சட்டப்படி அதை திருமணமாக கருத முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்தனர்.

News May 2, 2024

ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?

image

மாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் மிதக்கும். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் வெளிர் நிறத்தில் இருந்தாலும் அதிக வாசனை கொண்டதாக இருக்கும். ஆனால், ரசாயனம் மூலம் பழுக்க வைத்தவற்றில் வாசனையே இருக்காது.

News May 2, 2024

பயிற்சியின் போது டாஸ் வீசி பழகுகிறேன்

image

50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், பயிற்சியின் போது டாஸ் வீசி பழகுகிறேன். அதில் வெற்றி கிடைக்கிறது. ஆனால், களத்தில் டாஸ் போடும் போது தோல்வி அடைகிறேன். அதனால், நான் டாஸுக்கு வரும் போது அதிக அழுத்தமாக உணர்கிறேன். நாங்கள் பேட் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏதுவாக இல்லை” எனக் கூறினார்

News May 2, 2024

வாக்காளர்களை மிரட்டிய காங்., எம்எல்ஏ

image

கர்நாடகாவின் காக்வாட் தொகுதி எம்எல்ஏவான ராஜு காகே, வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவில் காங்., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தனக்கு சில இடங்களில் குறைந்த வாக்குகளே கிடைத்ததாகத் தெரிவித்தார். தற்போது அவர் மக்களவைத் தேர்தலில் காங்., வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்காவிடில், அப்பகுதியில் மின்சாரத்தைத் துண்டிப்போம் எனப் பேசியது சர்சையாகியுள்ளது.

News May 2, 2024

ஆவின் மோர் விற்பனை 30% அதிகரிப்பு

image

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாள்களாக மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ஆவின் மோர் விற்பனை 30% அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் தினமும் 30,000 பாட்டில் மோர்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 40,000ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாக்கெட் மோர் விற்பனை கடந்தாண்டு 10,000ஆக இருந்த நிலையில், தற்போது தினமும் 18,000ஆக உயர்ந்துள்ளது.

News May 2, 2024

தட்சிணாமூர்த்தியும் குருபகவானும் ஒருவரல்ல!

image

ஆன்மீக அன்பர்கள் பலரும் தட்சிணாமூர்த்தியும் குருபகவானும் ஒருவர்தான் என நினைத்துக் கொண்டு வழிபடுகின்றனர். உண்மையில், இருவரும் ஒருவரல்ல. தட்சிணாமூர்த்தி சிவவடிவானவர்; சிவகுரு. குருவோ கிரக வடிவானவர்; தேவகுரு. தோன்றுதல் மறைதல் இல்லாத தட்சிணாமூர்த்தியும் உதயம் அஸ்தமனம் கொண்ட குருவும் ஒன்றல்ல என சாஸ்திரம் கூறுகிறது. எனவே, குருவுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தட்சிணாமூர்த்திக்கு செய்யாதீர்கள்.

News May 2, 2024

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை

image

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சாா்பில், மே 15ஆம் தேதி வரை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு, மே 14ஆம் தேதி வரை விடுமுறை எனவும், நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனவும் உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

இன்று வேட்பாளர்களை அறிவிக்கும் காங்கிரஸ்

image

உ.பி: அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்., கட்சி தெரிவித்துள்ளது. ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சோனியா காந்தி, இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் 2004இல் அமேதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, 2019இல் தோல்வியடைந்தார். எனவே, இம்முறை ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

News May 2, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும்: வைகோ
▶தமிழகத்தின் மின் நுகர்வு புதிய உச்சம் தொட்டது
▶நாட்டில் 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்: பிரியங்கா காந்தி
▶இன்று 19 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்
▶தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: மம்தா
▶IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

News May 2, 2024

CSK அணிக்கு புதிய சிக்கல்

image

CSK வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். நேற்றைய போட்டியுடன் முஸ்தஃபிசூர் ரகுமான் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது CSK அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

error: Content is protected !!