India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் அரசு அதானிக்கானதல்ல, இந்தியாவுக்கானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வீட்டைப் பறித்துவிடும், எருமையைப் பறித்துவிடும், தாலியைப் பறித்துவிடும் என பிரதமர் மோடி விரக்தியின் விளிம்பில் பேசுவதாகத் தெரிவித்த அவர், காங்கிரஸ் அரசு மக்களிடம் எதையும் பறிக்காது என்றும், மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக வீணாக்கிய பணத்தை மக்களுக்கு எடுத்துக் கொடுக்கும் எனவும் கூறினார்.
வேதாந்தா குழுமம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் ₹1.66 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அவர், தேர்தலுக்கு பிறகு வெளிநாட்டினரின் முதலீடு அதிகரிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும் அந்நிறுவனத்திற்கு மொத்தமாக ₹1,200 கோடி கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக வெப்பம் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் உள் கர்நாடகா, ஒடிஷா, ஜார்கண்ட், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிக வெப்பமான ஆண்டாக 2024 மாறி வருகிறது.
தேர்தல் பரப்புரையில் அதிமுக காட்டிய சுணக்கம், பாஜகவுக்கு சாதகமாக மாறுமென சிலர் தப்புக் கணக்கு போடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக என்ற வலிமையான கட்சி தேர்தலுக்காக திட்டமிட்டு வேலை செய்யவில்லை. அதிமுகவின் தொய்வு திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும். அதே போல பாஜக வளரவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்றார்.
டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அகிப் இலியாஸ் தலைமையிலான அணியில், ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே, அயன் கான், ஷோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, பயாஸ் பட், ஷகீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
டெல்லி மகளிர் ஆணையத்தில் பணியாற்றிய 233 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அவர்களை நியமித்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் “நம்ம மாஸ்டர்” என்ற பெயரில் நடனம் ஆடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில், அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என பிரபுதேவா வீடியோ மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்ப அலை வீசுவது பற்றி கடந்த சில நாள்களாக அடிக்கடி வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு வருகிறது. வெப்ப அலை என்றால் என்னவென்று பார்ப்போம். ஒரு பகுதியில் நிலவும் இயல்பு வெப்பநிலையை விட கூடுதலாக 3°C நிலையானது, தொடர்ந்து 3 நாளுக்கு மேல் இருந்தால் அதனை வெப்ப அலை என்பர். இதன்படி சமவெளியில் 40°Cக்கு மேல், கடலோரப் பகுதிகளில் 37°Cக்கு மேல் வெப்பம் நிலவினால் அது வெப்ப அலையாகக் கருதப்படும்.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. <
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும் முஸ்லீம்களுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குண்டூரில் பிரசாரம் செய்த அவர், முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும், ஆட்சி அமைத்ததும் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார். மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கூடாது என அக்கட்சியின் கூட்டணியில் உள்ள பாஜக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.