News May 2, 2024

விவாதத்துக்கு தயாரா? மோடிக்கு கார்கே சவால்

image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி விவாதிக்க தயாரா? என அக்கட்சியின் தலைவர் கார்கே பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார். பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த எண்ணம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், பொய்களை திரும்பத் திரும்பக் கூறுவதால் அது உண்மையாகி விடாது என்றும் அவர் தெரிவித்தார்.

News May 2, 2024

‘மேதகு’ இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம்

image

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இசையை வழங்கி, வளர்ந்து வந்த இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் (28) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று உயிரிழந்தார். பிரபாகரனை மையமாக வைத்து உருவான ‘மேதகு’ 1, 2 திரைப்படங்களுக்கு இசையமைத்து மிகவும் புகழ் பெற்றவர். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், தமிழ் உணர்வாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

News May 2, 2024

மே.4ஆம் தேதி கத்தரி வெயில் தொடக்கம்

image

‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் நாளை மறுநாள் தொடங்கி 28ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. அதாவது, 25 நாள்களுக்கு வெயில் வாட்டி வதைக்க காத்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல் மாதத்திலேயே கடுமையான வெயில் பதிவானது. கரூர், தருமபுரி, வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி செல்சியசைக் கடந்து வெயில் பதிவாகும் நிலையில், வரும் நாள்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

News May 2, 2024

குஜராத்தில் ஹாட்ரிக் அடிப்பாரா மோடி?

image

குஜராத்தில் 2014, 2019 தேர்தல்களைப் போல 26 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியைப் பெற பிரதமர் மோடி தீவிரமாக முயற்சிக்கிறார். கடந்த 2 நாட்களாக சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இம்முறை வெற்றிக் கணக்கைத் தொடங்க முடிவெடுத்துள்ள காங்கிரஸ், பிரியங்காவை களம் இறக்கிவிட்டுள்ளது. அங்கு மே7இல் தேர்தல் நடைபெறுகிறது.

News May 2, 2024

பேருந்து கதவு கழன்று விழுந்து பெண் காயம்

image

திருச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பு பிரச்னை, அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தமருகில் வந்தபோது, அதன் தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது. இது பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது விழுந்தது. வலியில் துடித்த அவரை, சக பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 2, 2024

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்

image

தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு’ மற்றும் வெப்ப அலைக்கான ‘மஞ்சள்’ என ஒரே நேரத்தில் 2 எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, சேலம், திருச்சி, திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

6 மாதத்துக்கு முன்பே கெஜ்ரிவால் கைதாகி இருப்பார்

image

அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் முன்பே ஆஜராகி இருந்தால் 6 மாதத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டிருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார். ED பலமுறை அழைத்தும் கெஜ்ரிவால் விசாரணைக்கு வர மறுத்ததாக தெரிவித்த அவர், இந்த வழக்கில் பாஜக எந்த விதத்திலும் தலையிடவில்லை என்றார். திகார் சிறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கெஜ்ரிவாலை கொல்ல சதி என்பது நகைச்சுவை என்றும் அவர் கூறினார்.

News May 2, 2024

கோட்டக் வங்கி பங்கு 52 வாரத்தில் இல்லாத சரிவு

image

கோட்டக் மஹிந்திரா வங்கியில் 29 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மணியன் ராஜினாமா செய்ததையடுத்து, அதன் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 4.38% வரை சரிந்ததால், அந்நிறுவனத்தின் பங்குகள் 52 வாரத்தில் இல்லாத அளவில் ரூ.1,552ஆக குறைந்தது. இந்த வங்கியின் லாபம் அடுத்த ஒன்றரை வருடத்துக்கு குறைவாக இருக்கும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

News May 2, 2024

கல் குவாரி வெடி விபத்திற்கு காரணம் என்ன?

image

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல் குவாரியில் நடந்த பயங்கர வெடி விபத்து குறித்து FIRஇல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் வெடிமருந்து இருந்த வேனையும், நைட்ரஜன் இருந்த வேனையும் அருகருகே வைத்து, அவற்றை இறக்கியதாலேயே விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெடி மருந்துகளை பணியாளர்கள் கையாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

News May 2, 2024

கோடை வெயிலால் பீர் விற்பனை அதிகரிப்பு

image

கோடை வெயில் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். பீர் உற்பத்தியை தமிழக அரசு அதிகரித்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், டாஸ்மாக்கில் திட்டமிட்டு பீர் விற்பனையை அதிகரிக்கவில்லை. கோடை காலத்தில் மற்ற மது வகைகளின் விற்பனை குறைந்து, பீர் விற்பனை அதிகரித்தது என்று விளக்கமளித்தார்.

error: Content is protected !!