India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹70.50 குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ₹1,911க்கு விற்பனையானது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனையாகிறது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்குப் பின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும். ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போதைப் பொருள்கள், துப்பாக்கிகள் ஆகியவை ட்ரோன்கள் மூலமாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை சுமார் 60 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான ட்ரோன்கள் பஞ்சாப் எல்லையிலும், மற்றவை ராஜஸ்தான், குஜராத் எல்லையிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
* காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்
* ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பம் காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
* ஆபாச வீடியோ வழக்கில் எம்பி பிரஜ்வால் ரேவண்ணா நேற்று நள்ளிரவில் கைது
சின்னத்திரையில் பிரபலமாக இருப்பவர் விஜய் ஆதிராஜ். இவர் ஆர்யா தம்பி சத்யா நடிப்பில் 2013இல் வெளியான ‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சரியாகப் போகாததால் மீண்டும் சின்னத்திரைக்கே சென்ற அவர் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமா இயக்குகிறார். ‘நொடிக்கு நொடி’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் அஷ்வின் குமார் நாயகனாக நடிக்கிறார்.
வெயில் காலங்களில் நாம் அதிகமாக ஏசியை பயன்படுத்தும்போது குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் அதிலிருந்து சூடான காற்று வெளியே வரலாம். அதைத் தவிர்க்க சீரான இடைவெளியில் ஏசியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏசியின் வெளிப்புற பகுதியில் இருக்கும் ஃபேனில் இலையோ, தூசிகளோ இருந்தால், அவை கூலிங் கண்டன்சரை அடைத்து குளிர்ந்த காற்று வெளியே வருவது தடுக்கப்பட்டு, சூடான காற்று வெளியேற்றப்படும்.
T20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (63) தன வசம் வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா (35), பட்டர் (33), யுவராஜ் (33), வார்னர் (31), ஷேன் வாட்சன்(31), டி வில்லியர்ஸ்(30), விராட் கோலி(28) ஆகியோர் உள்ளனர். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
விவேகானந்தர் பாறையில் நேற்று முன்தினம் தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, இரண்டு நாள் தியானத்தை முடித்துள்ளார். பிரதமர் காவி உடை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையும் வேத மந்திரங்கள் கூறியபடி தியானம் செய்தார். இன்று மூன்றாம் நாள் தியானத்தில் ஈடுபடும் அவர், பிற்பகலில் தியானத்தை முடித்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.
▶ஜூன் – 1 ▶வைகாசி – 19 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:00 AM – 08:30 AM வரை, 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM வரை, 9:30 PM – 10:30 PM வரை ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM வரை ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM வரை ▶குளிகை: 6:00 AM – 7:30 AM வரை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ திதி: தசமி ▶ பிறை: தேய்பிறை
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ‘இந்தியன்-2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது, அதற்கு முன்பாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களின் டிராக் லிஸ்ட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அதில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்ட 6 பாடல்கள் அடங்கியுள்ளன.
Sorry, no posts matched your criteria.