India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 1-3 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான UDF 17-19 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆளும் சிபிஎம் தலைமையிலான LDFகூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் NDA கூட்டணி (பாஜக, என்சிபி, சிவசேனா) 30-36 இடங்களை கைப்பற்றும் என்று REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 48 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் இருமுனை போட்டி (INDIA கூட்டணி, NDA கூட்டணி) நிலவுகிறது. INDIA கூட்டணி (காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே) 13-19 இடங்களை பெறலாம் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக – 26
காங்கிரஸ் – 0
மற்றவை – 0
குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் எனவும், மற்ற கட்சிகள் ஒரு தொகுதியைக் கூட வெல்லாது என Times Now கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக (NDA கூட்டணி) 69-74 இடங்களை கைப்பற்றும் என்று REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உ.பி.,யில் மும்முனை போட்டி (INDIA கூட்டணி, NDA கூட்டணி, BSP) நிலவுகிறது. INDIA கூட்டணி 6 -11 இடங்களை பெறலாம் என்றும் தனித்து களம் கண்ட BSP ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 29 – 33 தொகுதிகளில் வெல்லும் என INDIA TODAY நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 7 – 10 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 0 – 2 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ராஷ்டிர சமிதி (BRS): 2 – 5
காங்கிரஸ்: 5 – 8
பாஜக: 7 – 10
தெலங்கானாவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் BRS மிக குறைந்த தொகுதிகளையே பெறவுள்ளது.
கேரளாவில் பாஜக 2 – 3 தொகுதிகளில் வெல்லும் என INDIA TODAY நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UDF 17 – 18 தொகுதிகளிலும், LDF 0 – 1 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 16-20 இடங்களில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 42 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் நான்கு முனை போட்டி (திரிணாமுல் காங்கிரஸ், INDIA கூட்டணி, இடதுசாரிகள், பாஜக கூட்டணி) நடைபெற்றது. பாஜக கூட்டணி 21- 25 இடங்களையும், INDIA கூட்டணி 0-1 இடங்களையும் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 முதல் 26 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 3 முதல் 7 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுக கூட்டணி எந்த தொகுதியும் வெல்ல வாய்ப்பில்லை என்றும், பாஜக கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.