India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வருகின்றனர். அறிவிப்புக்குப் பின் நடந்த போட்டிகளில், (பேட்டிங்) சஞ்சு சாம்சன்-0, பாண்டியா-0, ஷிவம் துபே-0, ஜடேஜா-2, ரோஹித் ஷர்மா-4, சூர்யகுமார் யாதவ்-10 ரன்களில் அவுட்டாகினர். (பவுலிங்) பும்ரா-0/17, ஜடேஜா-0/22, அர்ஷ்தீப் சிங்-1/52, சாஹல்-0/62 ரன் கொடுத்துள்ளனர்.
காங்., மகளிருக்கு நிதியுதவி அளிக்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் குறித்துப் பேசும்போதெல்லாம், பிரதமர் எரிச்சல் அடைவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் ஷிவமொக்காவில் பிரசாரம் செய்த அவர், 22 பெரும் பணக்காரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை பிரதமர் தள்ளுபடி செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக மாற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடும் வெயில் போன்ற காரணங்களால் பல தனியார் பள்ளிகள், பள்ளித் திறப்பை தள்ளிவைத்துள்ளன. வழக்கமாக ஜூன் 3ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அட்மிஷன் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளுக்கு பள்ளித்திறப்பு தேதி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வருமான வரி செலுத்தாத 5,06,671 பேரின் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய தவறியவர்களின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, வருமான கணக்கைத் தாக்கல் செய்ய 24 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
கோடை வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்களை அதிகம் பாதிக்கும் உஷ்ண நோய்களைத் தீர்க்க அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் வெயிலுகந்த அம்மன், சூரிய வெம்மையை தணிக்கும் தயாபரியாக அமர்ந்துள்ளாள். அம்மை, கொப்புளம், அக்கி போன்ற நோய்களை நீக்க சிறுமியின் வடிவில், அம்மன் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு உப்பு, மிளகு போட்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
RR அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் CSKவை பின்னுக்குத்தள்ளி புள்ளிப்பட்டியலில் SRH 4வது இடத்திற்கு முன்னேறியது. இதனால், மீதமுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் CSK வெற்றிபெற்றால் எளிதாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காய்ச்சல், காயம் போன்ற பல்வேறு காரணங்களால் CSKவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்புக்கு இன்று விடை கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் மே 20இல் வாக்குபதிவு நடக்க உள்ளது. இதனிடையே, பிரியங்கா காந்தி தான் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனக் கூறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
முகூர்த்தம், வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் மே 5ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, கடலூர், சிதம்பரம், கோவை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in, http://www.tnstc.in -இல் முன்பதிவு செய்யலாம்.
MI-KKR அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற வேண்டும். பலம் வாய்ந்த KKR அணியுடன் இன்று மோதவுள்ளதால், போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.
கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்ற முதல்வர் ஸ்டாலின், திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே இன்று சென்னை திரும்புகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். ஏப்.19இல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏப்.29இல் அவர் கொடைக்கானல் சென்றார். இந்நிலையில், அவர் எதற்காக ஒருநாள் முன்னதாக சென்னை திரும்புகிறார் என்ற தகவல் தெரியவில்லை.
Sorry, no posts matched your criteria.