India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும் மழையின் போது மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.
அமேதியில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எல் சர்மா நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராக கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 1983இல் கட்சியில் இணைந்த அவர் ராஜிவ் காந்தியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். 1991இல் ராஜிவ் மரணத்துக்கு பிறகு, அமேதி தொகுதி பொறுப்பாளரான அவர், 1999இல் அங்கு சோனியா வெற்றி பெற காரணமாக இருந்தார். இத்தனை வருட விசுவாசத்துக்கு அவருக்கு அமேதியை காங்., வழங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், 2 தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றால் எந்த தொகுதி எம்.பியாக தொடர்வார்? என அக்கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் முடிந்த பின் அதுபற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் 2 தொகுதிகளில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் எனவும் சூளுரைத்தார்.
இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ஹீரோ நிறுவனத்தை, ஹோண்டா பின்னுக்கு தள்ளியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் ஹீரோ ஒட்டுமொத்தமாக 5,33,585 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. ஆனால், ஹோண்டா நிறுவனம் 5,41,946 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 45% அதிகமாகும்.
இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாகக் கூறி, அதிமுக ஆட்சியில் TNPSC மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து, 4 வாரங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவு என்பது படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால், TNPSC பணி நியமனத்தில் கூட இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை என்றால் என்ன செய்வது.
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி புகார் அளிக்கலாம் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வால் ஜெர்மனி சென்றதாகத் தெரியவந்ததை அடுத்து, அவரை பிடிக்க சிறப்புக் குழுவை அந்நாட்டிற்கு அனுப்ப காவல்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
தோல்வி பயத்தால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என மோடி விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பிரசாரம் செய்த அவர், வயநாடு தொகுதியில் தோற்று விடுவார் என்பதால் ராகுல் ரேபரேலியில் போட்டியிடுவதாகவும், சோனியா காந்தியும் தேர்தலில் போட்டியிடாமல் ராஜஸ்தானில் இருந்து எம்பி ஆனதாகவும் தெரிவித்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களே தோல்வி பயத்தில் ஓடி ஒளிவதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் (எடுத்துகாட்டு: ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி) போட்டியிடுவதை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யாரோ ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் இருக்கிறது என்பதற்காக, அவரைத் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.
கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்-க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே, ஜூன் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தை மேல்முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.