News June 2, 2024

காங்கிரஸ் வாக்குறுதிகள் ஏற்கப்படவில்லையா?

image

மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம், 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை, மாதம் 10 கி. இலவச அரிசி, CAA சட்டம் ரத்து போன்ற பல அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது. ஆனாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அந்தக் கட்சிக்கு சாதகமாக இல்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், காங்கிரஸில் பல மாற்றங்கள் செய்வதே அந்தக் கட்சிக்கு நல்லது என யோசனை கூறியுள்ளனர்.

News June 2, 2024

POK மீது அதிகாரம் செலுத்த முடியாது: பாகிஸ்தான் அரசு

image

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அந்நாட்டு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பத்திரிகையாளர் அகமது ஷா வழக்கில், பாக்., அட்டர்னி ஜெனரல் இந்த கருத்தை தெரிவித்தார். POK வெளிநாட்டுப் பகுதி என்றால், பாக்., ராணுவம் அங்கு என்ன செய்கிறது என்று நீதிபதி கயானி கேள்வி எழுப்பினார். பாஜக POK-வை மீட்போம் என்று கூறும் நிலையில், இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.

News June 2, 2024

இன்றைய முக்கியச் செய்திகள்

image

*மத்தியில் தொடர்ந்து 3ஆவது முறையாக பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
*தமிழகத்தில் 32-37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு
*டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் என கணிப்பு
*உலகக் கோப்பை T20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

News June 2, 2024

Pre diabetes பிரச்னையை சரி செய்ய முடியும்

image

Pre diabetes எனப்படும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை, வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வாக்கிங், யோகா, ஜிம் பயிற்சிகள் போன்று ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும் எனவும், தூக்கம் முறையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மேலும், பாலிஷ் செய்யாத முழுத் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

News June 2, 2024

உலகக் கோப்பை T20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்

image

உலகக் கோப்பை T20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில், அமெரிக்கா – கனடா அணிகள் மோதுகின்றன. டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற USA, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதேபோல, இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை மே.இ.தீவுகள் எதிர்கொள்கிறது. ஜூன் 5ஆம் தேதி இந்தியா – அயர்லாந்து அணிகள் மோத உள்ளன.

News June 2, 2024

பாஜக நடவடிக்கைகளில் மக்கள் திருப்தி?

image

CAA சட்டம் அமல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், 3ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதேபோல, CBI, ED, ECI போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில், பாஜக அரசின் சில நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்வதாக சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

News June 2, 2024

நவீன் பட்நாயக் கட்சியை ஓவர் டேக் செய்யும் பாஜக?

image

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு, பாஜக பெரும்பான்மை பெரும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஒடிசாவை தமிழர் (V.K.பாண்டியன்) ஆளுவதா என மோடி, அமித்ஷா செய்த பிரசாரமே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், 5 முறையாக நவீன் பட்நாயக் ஆட்சி தொடர்வதால், மாற்றத்திற்காக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கலாம்ஆ

News June 2, 2024

தென் மாநிலங்களில் பாஜக கை ஓங்குகிறது?

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் பிரதமர் மோடி அடிக்கடி பயணம் மேற்கொண்டார். அதன் பலனாக தமிழகத்தில் 2-4, கேரளாவில் 1-3 தொகுதிகளில் பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திராவில் பாஜக கூட்டணி சிறப்பான வெற்றி பெறும் எனக் கணித்துள்ள நிலையில், தென் தமிழகத்தில் பாஜகவின் கை ஓங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

News June 2, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூன் – 2 ▶வைகாசி – 20 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, மாலை 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 01:30 PM – 02:30 PM வரை ▶ராகு காலம்: 4:30 PM – 06:00 PM வரை ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM வரை ▶குளிகை: 03:00 PM – 4:30 PM வரை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ திதி: ஏகாதசி

News June 2, 2024

மேற்கு வங்கம்: 3இல் 2 பங்கு பாஜகவுக்கு

image

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 3இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக சந்தேஷ்காலி விவகாரம், மோடி, அமித்ஷாவின் பிரசார யுக்தி ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, INDIA கூட்டணியில் TMC, காங்கிரஸ் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 2 கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!