India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA கூட்டணியைச் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது, எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். வாக்கு வித்தியாசம் நிலவும் தொகுதிகளில், வெற்றி பெற தகிடுதத்தங்களை செயல்படுத்த பாஜக முனையலாம் எனக் குற்றம்சாட்டிய அவர், INDIA கூட்டணி முகவர்கள் 17-சி படிவத்தை கவனமாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மே மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வசூலானதை விட 10% அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டியாக ₹32,409 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ₹40,265 கோடியும் வசூலாகியுள்ளது. மே மாதத்தில் இறக்குமதி குறைந்த போதிலும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் 15.3% வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடந்து வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து, தமிழக கோழிப் பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜுன் 4 வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் எனக் கூறியிருந்தார். இன்னும் 2 நாள்களே வாக்கு எண்ணிக்கைக்கு உள்ள நிலையில், அண்ணாமலை சொன்னது போல அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லுமா, செல்லாதா? அதற்கான முயற்சி நடந்தால், இபிஎஸ் எப்படி தடுத்து நிறுத்துவார் என்ற கலக்கத்தில் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். அமெரிக்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் செயற்கை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருக்கும் எனக் கூறிய அவர், அபாரமான ஃபார்மில் உள்ள இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி, தோல்வியை பற்றி சிந்திக்காமல் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 2 பேர் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி 3 நிமிடங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா 2 முறை விண்வெளி சென்று 322 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய அனுபவம் பெற்றவராவார்.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும், சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் தான் நடைபெற இருந்தது. எனினும், இரு மாநில பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தமிழ்நாட்டிலேயே வடக்கு பார்த்தபடி, தனிக் கோயில் கொண்டருளும் பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் திருமயம் கோட்டையில் மட்டுமே உள்ளது. பல்லவர், முத்திரையர், சோழ வேந்தர்கள் திருப்பணி செய்து, வணங்கிய காவல் தெய்வமான இந்த கோட்டை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று புனுகு சாற்றி, சந்தனகாப்பு செய்து, நெய் தீபமேற்றி, மிளகு வடை நைவேத்தியம் வழிபட்டால் அரசன் போல அதிகாரம் கொண்ட வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம், 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை, மாதம் 10 கி. இலவச அரிசி, CAA சட்டம் ரத்து போன்ற பல அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது. ஆனாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அந்தக் கட்சிக்கு சாதகமாக இல்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், காங்கிரஸில் பல மாற்றங்கள் செய்வதே அந்தக் கட்சிக்கு நல்லது என யோசனை கூறியுள்ளனர்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அந்நாட்டு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பத்திரிகையாளர் அகமது ஷா வழக்கில், பாக்., அட்டர்னி ஜெனரல் இந்த கருத்தை தெரிவித்தார். POK வெளிநாட்டுப் பகுதி என்றால், பாக்., ராணுவம் அங்கு என்ன செய்கிறது என்று நீதிபதி கயானி கேள்வி எழுப்பினார். பாஜக POK-வை மீட்போம் என்று கூறும் நிலையில், இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
Sorry, no posts matched your criteria.