India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலில், இந்திய அளவில் பாஜக கூட்டணி 300 இடங்களில் வெல்லும் என்று அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தது தெரிந்ததே. இந்நிலையில், நேற்று வெளியான EXIT POLLS முடிவுகள் அவரது கணிப்பையொற்றியே இருந்தன. இது குறித்து முதன்முறையாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் அரசியல் குறித்து பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகளின் அலசல்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள்” என அறிவுரைக் கூறியுள்ளார்.
திரைப்படங்கள், ஆல்பங்களில் பலவகை இசை இருக்கும். அதில் மற்ற இசைப் பாடல்களை விட மெலடி இசைப் பாடல்கள் ஹிட் ஆவதை பார்த்திருப்போம். இதற்கு பாடல் வரிகள் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், உளவியல் காரணமும் உண்டு. மனிதர்கள் அனைவரும் ஏதேனும் ஒருவகையில், எமோஷனல் உணர்வை கொண்டிருப்பர். மெலடி இசையை கேட்கையில் அந்த உணர்வு பூர்த்தியாகி மனம் திருப்தியடைவதை உணர்வர். மெலடி இசை ஹிட்டாக இதுவே காரணமாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்த கருத்துக் கணிப்பை Times Now வெளியிட்டுள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தரப்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அங்கு களம் கண்டனர். இதில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சிந்திரனே வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. குறிச்சிக்குளம் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிலை, 25 அடி உயரம் கொண்டது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளைக் கொண்டு துரு பிடிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்தியன்-2 படத்திற்கு உறுதுணையாக நின்ற தம்பி உதயநிதி ஸ்டாலினுடன் தான் நிற்கும் நேரம் வரலாம் என்று நடிகரும் ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தியன் 2 பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், “மக்களை பிரித்தாளும் முயற்சி இந்தியாவில் எடுபடாது. தமிழன் இந்தியாவை ஆள வேண்டும். அதையும் நாம் செய்து காட்டுவோம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். அதை யாராலும் மாற்ற முடியாது” என்றார்.
இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, கடந்த மே மாதம் விற்பனையான கார்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 1.57 லட்சம் கார்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 மே மாதத்துடன் (1.51 லட்சம்) ஒப்பிடுகையில் 4% அதிகம். அதேநேரத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி 26,477இல் இருந்து 17,367ஆக குறைந்துள்ளதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வீரர்கள் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளனர். அவர்களில் ரச்சின் ரவீந்திரா (NZ), கேசவ் (SA), தேஜா (நெதர்லாந்து), காஷ்யப் பிரஜாபதி (ஓமன்), அல்ஃபேஷ் ரஞ்சனி, ரோனக் படேல் (உகாண்டா), ரவீந்தர், நிகில், பர்கத், ஷ்ரேயாஸ் மௌவா (கனடா), மோனார்க், ஹர்மீத் சிங், மிலிந்த் குமார், நிசார்க், நிதிஷ்குமார், சவுரப் (அமெரிக்கா) ஆகியோர் அடங்குவர்.
2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டன. இந்த 4 கட்சிகளுக்கும் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உண்டு. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறுகின்றன. அப்படி அதிகரித்தால், இக்கட்சிகளின் வாக்கு சதவீதம் குறையும் என்பதால் அக்கட்சிகளின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் 5 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
Sorry, no posts matched your criteria.