India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமாரின் மரண வாக்குமூலம் கடிதத்தில் நாங்குநேரி MLA ரூபி மனோகரன் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து பேசிய அவர், ஜெயக்குமார் நெருங்கிய நண்பர்; அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு. என் மீதான புகாரில் உண்மையில்லை, அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் யாரோ சிலர் செயல்படுகிறனர். காவல்துறை உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
KKRக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். 5 முறை கோப்பையை பெற்றுத் தந்த ரோஹித்தை இம்பாக்ட் பிளேயராக எப்படி ஆட வைக்கலாம் என ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து MI அணி வீரர் பியூஷ் சாவ்லா, KKRக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ரோஹித்துக்கு முதுகு பிடிப்பு இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணாவை மத்திய அரசு காப்பாற்றுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பிரஜ்வால் வெளிநாடு தப்பிச் செல்ல மத்திய அரசு உதவியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வெப்ப அலை வீச்சு மனிதர்களுக்கு மட்டுமல்ல ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் வதையை அளிக்கிறது. எனவே, இந்த வெயிலில் இருந்து அவற்றை பாதுகாக்க *கால்நடைகளை அடிக்கடி குளிப்பாட்டுங்கள் & குடிப்பதற்கு நீர் காட்டுங்கள். *உயரமான கொட்டகை அமைப்பதோடு, அதனைச் சுற்றி சணல் சாக்குகள் கட்டி, நீர் தெளிக்கலாம். *மேய்ச்சல் நேரத்தை குறைக்கலாம். *பசுந்தீவனத்துடன் தாதுப்பு & வைட்டமின் சத்துக்களை சேர்த்து கொடுக்கலாம்.
தனது பாடலை அனுமதி பெறாமல் ‘கூலி’ படத்தில் பயன்படுத்தியதாகத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, அது தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்குமான பிரச்னை எனத் தெரிவித்தார். ரஜினியின் ‘கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 6ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், அடுத்த 2 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக இருக்கும். அதன்பின் மே 7, 8ஆம் தேதிகளில் வெப்பநிலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் தன் மீது எந்த ஊழல் கறையும் இல்லை என்றும் தனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை எனவும் பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். ஜார்கண்டில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஜார்கண்டில் மே 13 முதல் ஜூன் 1 வரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2ஆவது வாரமாக சரிந்துள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி கணக்கீட்டின்படி, $2.41 பில்லியன் சரிந்து, $637.92 பில்லியானாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் $2.28 பில்லியன் சரிந்து, $640.33 பில்லியனாக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பு $1.27 பில்லியன் குறைந்து, $55.53 பில்லியனாக உள்ளது. SDRs, $15 மில்லியன் உயர்ந்து, $18.04 பில்லியனாக உள்ளது.
தென் தமிழக கடலோரங்களில் அதீத அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை இரவு வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும், சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுகளை தூரத்தில் தள்ளி நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தில் Swell surge எனப்படும் அதீத அலைகள் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கள்ளக்கடல் நிகழ்வுகள் இந்தியக் கடலோரப் பகுதிகளில் வளர்ந்து வரும் காலநிலை மாற்ற அபாயமாகக் கருதப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.