India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை கால சீசன் பழங்களில் மிகவும் முக்கியமானது மாம்பழம். முக்கனிகளில் ஒன்றான இதனை பழங்களின் ராஜா என்று அழைப்பர். வெயிலில் பரவும் தொற்று பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும், சூப்பர் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆற்றல் இதில் அதிகமுள்ளது. இரும்புச்சத்து, காப்பர், போலிட், நார்சத்து, அமோனியா & A,B,C,E,K ஆகிய வைட்டமின்கள் நிறைந்த மாம்பழத்தைத் தவிர்க்காமல் சாப்பிடுங்கள்.
அமேதியில் 1980இல் நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் காந்தி வெற்றிபெற்ற நிலையில், சில மாதங்களிலேயே விமான விபத்தில் அவர் உயிரிழந்தாா். தொடர்ந்து வந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ராஜீவ் காந்தி, 84% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கோட்டையாக இருந்துவந்த அமேதியில், 2019இல் ராகுல் தோற்றார். தற்போது, அவர் ரேபரேலி தொகுதிக்கு மாறிய நிலையில், அமேதியில் கே.எல்.சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவின்படியே ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ராகுல் 2 தொகுதியில் போட்டியிடுவதை பாஜகவும், மோடியும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த கே.சி. வேணுகோபால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 3 தொகுதிகளிலும், மோடி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டதாக குறிப்பிட்டார்.
‘எதற்கும் துணிந்தவன்’ (2022 ) படத்திற்கு பின், படம் இயக்காமல் இரண்டாண்டு காலம் அமைதி காத்தார் ‘பசங்க’ பட இயக்குநர் பாண்டிராஜ். தற்போது, விஜய் சேதுபதியிடம் கதை ஒன்றை சொல்லி நடிக்க சம்மதம் வாங்கி இருக்கிறார். படத்தின் கதையை கேட்ட உடனேயே அதில் விஜய் சேதுபதி நடிக்க ஒத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜூலையில் படப்பிடிப்பைத் தொடங்குவற்கான முன்னேற்பாடுகளை பாண்டிராஜ் செய்துவருகிறாராம்.
டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் அணிகள் தொடர்பாக தனது கணிப்பை கங்குலி கூறியுள்ளார். 2023 உலகக் கோப்பை போல, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளே போதும் எனத் தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும், மிக சிறப்பான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரோஹித்தும், டிராவிட்டும் இணைந்து செயல்பட்டு உலகக் கோப்பை கனவை நிறைவேற்றுவார்கள் என்றார்.
அதிமுகவின் எதிர்காலம் இபிஎஸ்ஸின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக திமுகவும், அதிமுகவும் மட்டும்தான் பலமாக இருக்கின்றன. மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் கவலையில்லை என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சியான அதிமுக இருக்கக்கூடாது” என வலியுறுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட பல்வேறு பொறியியல் படிப்புகளை படித்து வரும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 2 முறை செமஸ்டர் தேர்வு நடைபெறும். இந்த கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை www.annauniv.co.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அண்ணா பல்கலை., தெரிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் இன்றைய சூழலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுபட்ட குரலாகப் போராடும் வணிகர்களின் அனைத்து சிக்கல்களும் களைந்து, அவர்கள் வணிகத்தில் வளர்ச்சி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூன் 1இல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியை அமெரிக்கா அறிவித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த மொனாங்க் படேல் கேப்டனாக உள்ள அந்த அணியில், 2018-19 ரஞ்சியில் 1331 ரன்கள் குவித்த மிலிந்த் குமார், மும்பையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்மித் சிங், வேகப்பந்து வீச்சாளர் சவுரப் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர். இந்தியர்கள் உன்முக்த் சந்த், ஸ்மித் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்திற்கான உண்மைக் காரணத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 30ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.