News May 4, 2024

ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது

image

கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள் மீது 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

News May 4, 2024

ராகவா லாரன்ஸுக்கு ரஜினி வாழ்த்து

image

ஏழை மக்களுக்கு உதவும் லாரன்ஸின் பணி சிறக்க வேண்டும் என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல ஆயிரம் மக்களுக்கு உதவும் வகையில் புதிய அமைப்பை தொடங்கிய லாரன்ஸை வாழ்த்துவதாக தெரிவித்த அவர், இறைவனின் ஆசி அவருக்கு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மே 1இல், ‘மாற்றம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கிய லாரன்ஸ் ஏழைகள், மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவ உள்ளதாக தெரிவித்திருந்தார்.

News May 4, 2024

பைடனுக்கு பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்

image

இந்தியாவில் அந்நியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதாகக் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்தியா எப்போதுமே உலகின் பல்வேறு சமூகங்களை திறந்த மனதுடன் வரவேற்றிருக்கிறது. சிஏஏ சட்டம் மூலம் சிக்கலில் உள்ள மக்களுக்கு எங்கள் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்நியர்களை நாங்கள் ஒருபோதும் வெறுப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News May 4, 2024

முட்டை விலை கிடுகிடு உயர்வு

image

முட்டை கொள்முதல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கோடிக்கணக்கான முட்டை உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 30ஆம் தேதி முதல் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 15 காசுகள் உயர்ந்து ₹5ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 30 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை ₹5.30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை, தருமபுரி, சேலத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கரூர், ஈரோடு, திண்டுக்கல், தேனியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.

News May 4, 2024

17 பேரைக் கொன்ற நர்சுக்கு 760 ஆண்டுகள் சிறைத் தண்டனை

image

அமெரிக்காவில் 17 நோயாளிகளைக் கொன்ற நர்சுக்கு 760 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவை சேர்ந்த நர்சு ஹீதர் பெர்ஸ்டி, 2020-2023 வரை 5 மருத்துவமனைகளில் பணிபுரிந்தபோது, 22 நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் செலுத்தியுள்ளார். இதனால், மாரடைப்பு ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

News May 4, 2024

ஆடைகளில் உள்ள XL, XXL குறியீட்டுக்கு என்ன அர்த்தம்?

image

ரெடிமேட் சட்டை, சுடிதார், நைட்டியில் XL, XXL என குறிப்பிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். XL எனில் எக்ஸ்ட்ரா லார்ஜ், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதைக் குறிக்கும். அதாவது, XL அளவுள்ள உடை எனில், 42 முதல் 44 இன்ச் வரை இருக்கும். XXL உடைகள் 44 முதல் 46 இன்ச் வரை இருக்கும். S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால் ஆகும்.

News May 4, 2024

ரேபரேலியில் ராகுல் நிச்சயம் தோற்பார்

image

ராகுல் ரேபரேலியில் நிச்சயம் தோற்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர், “அமேதியில் தோல்வி அடைந்து ராகுல் வயநாடு சென்றார். தற்போது வயநாட்டில் தோல்வி அடைவோம் என்பதால் ரேபரேலி வந்துள்ளார். பிரச்னை ராகுலிடம் உள்ளது” என்றார். கடந்த 2019இல் அமேதியில் தோல்வி அடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

News May 4, 2024

தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ரேவண்ணாவின் முன் ஜாமின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவரை, கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வு பிரி போலீசார் கைது செய்தனர்.

News May 4, 2024

குஜராத் அணி பேட்டிங்

image

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 4 வெற்றிகளுடன் GT அணி 8ஆவது இடத்திலும், 3 வெற்றிகளுடன் RCB கடைசி இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

error: Content is protected !!