India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜை படக்குழு அணுகியுள்ளது. கதையில் வில்லனுக்கும் முக்கியத்துவம் இருந்தால் நடிப்பதாகக் கூறிய சத்யராஜ், இல்லையென்றால் அதை ஈடுசெய்கிற அளவுக்குச் சம்பளத்தை கொடுக்க வேண்டுமென கோரியதாக் கூறப்படுகிறது. தற்போது, அவருடன் லோகேஷ் தொடர்ந்து பேசிவருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதாக அதனை தயாரித்த AstraZeneca நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். “ஒருவேளை அப்படியான பக்க விளைவுகள் ஏதும் வருமேயானால், அது ஊசி செலுத்திய ஒரு மாதத்திற்குள் வந்திருக்க வேண்டும். நாம் அதனையெல்லாம் கடந்துவிட்டோம்” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தன் பாலின ஆதரவு பிரசாரத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு காவல்துறையை இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் தன் பாலின ஆதரவுப் பதிவு இடம்பெற்றதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “தமிழின பண்பாட்டை சீரழிக்கும் இத்தகைய பிரசாரத்தை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
வெயிலின் உச்சமாக கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இதன் தாக்கமாக, நேற்று 15 இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அடுத்த 25 நாட்களுக்கு கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நேற்றைய தினம் கரூர், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பத்தூர், திருத்தணி, தருமபுரி, மதுரை ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் இருந்து ‘நாஞ்சில் விஜயன்’ விலகியதாக அவரே அறிவித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது சீசனில் இருந்து ஏற்கெனவே வெங்கடேஷ் பட் உள்ளிட்டவர்கள் விலகி சன் டிவிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது விலகுவதாக அறிவித்திருக்கும் நாஞ்சில் விஜயன், விஜய் டிவிக்கும் எனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான மானியம், சார்ஜிங் மையம் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட விபரங்களை செல்ஃபோன் செயலி வழியே இனி அறியலாம். இந்தச் செயலியை தமிழக அரசு ஜூன் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அதில், மத்திய – மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள், மானிய உதவி, வாகன டீலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் கிடைக்கும். இந்திய அளவில், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வந்ததால் அதன் காலை வெட்டி கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார் அந்த செவிலியர். குழந்தையின் காலை வெட்டும்போது செவிலியருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், 1. முழுக் கைகளுடன் கூடிய ஆடைகள் அணியக்கூடாது. அரைக் கை சட்டையே அணிய வேண்டும் 2. ஹீல்ஸ் இல்லாத செருப்புகள், ஷூக்கள் மட்டுமே அணிய வேண்டும் 3. பர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை 4. வாட்ச், வளையல், கேமரா, ஆபரணங்கள், உலோக பொருட்களுக்கு அனுமதி இல்லை 5. மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள், பிற பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
மயங்க் யாதவ் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். “மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது” என்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ பங்கேற்ற முதலிரண்டு போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறவுள்ளதால் தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 1351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.