India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி தராத பட்சத்தில், குடியரசு தலைவரிடம் முறையிட INDIA கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நகர்வுகள், தொங்கு நாடாளுமன்றத்திற்கான அறிகுறியா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புகிறது.
அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில், ஜேடி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பயமறியா பிரம்மை’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பள்ளிகளில் 5 – 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், 10 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்க, மாணவர்களின் ஆதார் அட்டை, அடையாள அட்டை தேவை.
பரபரப்பான சமூக சூழலில், மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பல்வேறு செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். *மனதுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடலாம். *ஓவியம் வரைதல், இசை கருவிகள் வாசித்தல் போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். *நல்ல புத்தகங்களை வாசிக்கலாம்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா இல்லத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக வெளியான நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகத் தெரிகிறது.
இங்கிலாந்தில் அடமானம் வைத்து மீட்கப்பட்ட 100.28 டன் தங்கம், மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பல்வேறு சர்வதேச பிரச்னைகள் காரணமாக, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், பேங்க் ஆஃப் இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தி வந்த லாக்கர் செலவு குறையும். தற்போது, இந்தியாவுக்கு சொந்தமாக 822 டன் தங்கம் உள்ளது. இதில், 413.9 டன் தங்கம் வெளிநாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு சில மணி நேரமே இருக்கும் நிலையில், INDIA கூட்டணித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக வந்தாலும், அதில் மாற்றம் ஏற்படலாம். ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளது. அப்படியொரு சூழல் நிலவினால், உடனே முடிவெடுக்க, கூட்டணித் தலைவர்களை காங்., அழைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்துவிட்டதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. தங்களுடைய திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நடாஷா நீக்கியது, இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது. இந்த சூழலில், அந்த புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றியுள்ளார் நடாஷா. இதன் மூலம், இருவரும் திருமண உறவில் நீடித்து வருவதை சூசகமாக உறுதி செய்துள்ளனர்.
பெங்களூருவில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில், தெலுங்கு திரைப்பட நடிகை ஹேமாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பண்ணை வீட்டில் மே 19ஆம் தேதி நடந்த சோதனையில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கினர். போதை விருந்தில் ஹேமாவும் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதை மறுத்து வந்தார். அவருக்கு நடத்திய சோதனையில் போதை பொருள் உட்கொண்டது உறுதியானதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.