India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் விளையாடுகிறது. 54ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7இல் வெற்றி பெற்றுள்ள KKR அணி புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 10இல் 6 போட்டிகளில் வென்ற LSG அணி 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
ஆந்திர டிஜிபியை பணியிட மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர டிஜிபியாக ராஜேந்திரநாத் ரெட்டி உள்ளார். அவரை உடனடியாக பணியிட மாறுதல் செய்யவும், அந்த பதவிக்கு டிஜி நிலையிலான 3 காவல்துறை அதிகாரிகளை பரிந்துரைக்கும்படி, ஆந்திர அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ECன் இந்நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. முதலில் விளையாடிய சென்னை, 167 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய பஞ்சாப், சிஎஸ்கே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. தற்போது, 15 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணியின் வெற்றி பிரகாசமாகியுள்ளது.
மீன்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்தது. இந்நிலையில் நேற்று வரை ₹100, ₹200க்கு விற்பனையான மீன்கள் இன்று ₹200, ₹400 என விலை உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமையான இன்று, கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை 2 மடங்காக உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரிய தம்பியை, ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக பெரிய தம்பி கூறும்போது, “தம்பி ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். தாத்தா நல்லாருக்கீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகாது. பூரண குணமடைந்து வருவீர்கள்” என ஆறுதல் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள், இந்தியாவுடன் சேர விரும்புவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என்ற ராஜ்நாத் சிங், படைபலத்தை கொண்டு அப்பகுதியை இந்தியா பிடிக்காது என்றும், ஆனால், அப்பகுதி மக்களே இந்தியாவோடு சேர விரும்புகின்றனர் என்றும் கூறினார்.
நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி சத்து உள்ளது. ஆண்டி ஆக்ஸிடெண்டான வைட்டமின் சி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக நம் உடலை பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கோடை காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்படுவதோடு பருவகால தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளில் இருந்தும் நம் உடலை பாதுகாக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைக்க நெல்லி உதவுகிறது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 8.50 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனியில் இடியுடன் மிதமான மழையும், ஈரோடு, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கோடை சீசனில் ஓட்டல்கள், கடைகளை திறக்க மாட்டோம் எனக் கொடைக்கானல் வணிகர்கள் எச்சரித்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறியுள்ள வணிகர்கள், உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம் எதுவும் தர மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
3ஆவது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.