India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் அரை சதம் விளாசினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். கொல்கத்தா அணி தற்போது வரை 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. லக்னோ தரப்பில் நவீன் உல்-ஹக் மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக நடிகை ஆத்யா பிரசாத் தெரிவித்துள்ளார். தமிழில் மிகவும் பிடித்த நடிகர் சூர்யா எனக் கூறிய அவர், 4 படங்களாவது அவருடன் இணைந்து நடித்துவிட வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார். மலையாளத்தில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தமிழில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ’13’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், சேலம் மற்றும் கோவையில் இடியுடன் லேசான மழையும் பெய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டை பாஜக எப்போதும் எதிர்ப்பதாகவும், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழித்து விடுமென்றும் தெரிவித்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் முறையே குஜராத் மற்றும் மும்பை அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் ராகுல் காந்தி செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ராகுலுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், 2 பேரும் செல்லவில்லை என்றும், இதற்கு வாக்கு வங்கிதான் காரணமென்றும் கூறினார்.
தான் காந்தி குடும்பத்தின் பணியாளன் இல்லை என அமேதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா தெரிவித்துள்ளார். கட்சி வேட்பாளராக தேர்வு செய்துள்ளதால் அமேதியில் போட்டியிடுவதாக தெரிவித்த அவர், யாரை வேட்பாளராக தலைமை அறிவித்தாலும் பாஜகவை தோற்கடிப்போம் என்றார்.
முன்னதாக, ரேபரேலியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் தினேஷ் பிரதாப், அமேதியில் காங்., தனது ப்யூனை நிறுத்தியுள்ளதாக விமர்சித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவை நீக்கிய மத்திய அரசு, சட்டப்பேரவையை கலைத்தது. அதையடுத்து, அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்படும், ஆனால் காலவரையறை தெரிவிக்க இயலாது என்று ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக, ஜடேஜா 43 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே திணறியது. 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ICSE பாடத்திட்டத்தில் 10,12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. 10, 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு நாளை காலை 11 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. முடிவு வெளியிடப்பட்டதும், cisce.org, results.cisce.org. இணையதளங்களில் பகிரப்படும் என்று ICSE அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.