News May 6, 2024

இந்திய மாணவர்களை கவரும் கனடா

image

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தரமான கல்வியை வழங்கினாலும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் கனடாவில் மேற்படிப்பு படிக்க விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அங்கு 2 வருடப் படிப்பை முடித்த பிறகு 3 வருட வேலை பெறத் தகுதி பெறுவதோடு, நிரந்தரமாக அங்கேயே வசிப்பதற்கும் விண்ணப்பிக்க முடியும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கனடாவில் மாணவர் விசா பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

News May 6, 2024

சமந்தா தவறுதலாக வெளியிட்ட புகைப்படம்

image

‘மயோசிடிஸ்’ எனும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று ‘ஸ்பா’ மூலம் சிகிச்சை மேற்கொண்ட அவர், அதுகுறித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ஆனால், ‘ஸ்பா’ படத்திற்கு பதிலாக, அந்தரங்க புகைப்படத்தை பகிர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவருக்கு உடனே தெரியவந்ததும், அந்த புகைப்படத்தை டெலிட் செய்தார்.

News May 6, 2024

ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது

image

ICSE பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது. முடிவுகளை cisce.org, results.cisce.org. ஆகிய இரு இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.

News May 6, 2024

ஜூன் 12இல் ரேண்டம் எண் ஒதுக்கப்படும்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12இல் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 6 வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூன் 12 ஆகும். தொடர்ந்து, ஜூலை 10இல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

துவண்டுவிட வேண்டாம் மாணவர்களே

image

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் செய்தியுடன் மாணவர்களின் தற்கொலை செய்தியும் வெளியாகிறது. உயிரை விட மதிப்பெண்களே முக்கியம் என்ற மாணவர்களின் நினைப்பே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகிறது. வாழ்க்கையின் வெற்றி மதிப்பெண்களை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதில்லை மாணவர்களே. அதனை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை எடுத்து சொல்வதும் அவசியம்.

News May 6, 2024

நம்பர்-1 கொங்கு, நம்பர்-2 தென் மாவட்டம், நம்பர்-3 வடமாவட்டம்

image

முதல் இடத்தை பிடிப்பதற்கு தென் மாவட்டங்கள், கொங்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் முதல் இடத்தை திருப்பூர் (97.45%)பிடித்துள்ளது. கொங்கு மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு, தென்மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கை (97.42%) 0.03% குறைவான தேர்ச்சியை பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளன. 3ஆம் இடத்தை வட மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் (97.25%) பிடித்துள்ளது.

News May 6, 2024

மே 9 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், துணைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

மாணவர்களே இந்த எண்ணிற்கு அழையுங்கள்

image

+2 தேர்வு முடிவு வெளியான நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (UG) சேர இன்று முதல் http;//tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹48, பதிவுக்கட்டணம் 2 என மொத்தம் ₹50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST மாணவர்கள் பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044 -24343106, 24342911 என்ற எண்ணை அழைக்கவும்.

News May 6, 2024

மாணவிகளை முந்த முயற்சிக்கும் மாணவர்கள்

image

மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான தேர்ச்சி விகித இடைவெளி குறைந்து வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு 96.38% மாணவிகளும், 91.45% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதனால் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 96.44% மாணவிகளும், 92.37% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதால் தேர்ச்சி இடைவெளி 4.07%ஆக குறைந்துள்ளது.

News May 6, 2024

ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி மிகவும் குறைவு

image

+2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.02%, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 95.40% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89%, ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98%, இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 94.78% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் – பெண்கள் இணைந்து படிக்கும் பள்ளிகளை விட ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.

error: Content is protected !!