News May 6, 2024

அலையில் சிக்கி 5 மாணவர்கள் பலி

image

அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை மீறி, குமரி கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை, திருச்சியை சேர்ந்த 12 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குமரிக்கு சுற்றுலா சென்றபோது கடலில் குளித்தனர். இவர்களில் 6 பேரை அலை இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

News May 6, 2024

4 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்

image

பழனியை அடுத்த நெய்க்கரப்பட்டி பி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவி அப்சரா 600-க்கு 592 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய 4 பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 96 மதிப்பெண்களை மாணவி அப்சரா பெற்றுள்ளார்.

News May 6, 2024

மும்பை இந்தியன்ஸ் தோற்றால் வீட்டுக்கு தான்

image

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணி, எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறும். ப்ளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா மும்பை?

News May 6, 2024

ரேபரேலியில் ராகுலை வீழ்த்துவது கடினம்

image

ரேபரேலி தொகுதி காங். கோட்டையாக இருந்தாலும், வாக்கு வங்கி சரிந்து வருவதைக் கவனிக்க வேண்டியுள்ளது. 2009 தேர்தலில் 72.2%ஆக இருந்த காங். வாக்கு வங்கி 2014இல் 63.8%ஆகவும், 2019இல், 55.80%ஆகவும் சரிந்துள்ளது. மறுபுறம் பாஜகவின் வாக்கு வங்கி 38.7% வரை உயர்ந்திருந்தாலும், நேரு குடும்பத்துடன் அத்தொகுதி மக்கள் உணர்வுப்பூர்வமாக பிணைந்துள்ளதால், ராகுல் காந்தியை வீழ்த்துவது கடினம் என்றே கருதப்படுகிறது.

News May 6, 2024

மாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி

image

மாணவர்களின் கல்விச் சான்றிதழை பாதுகாக்க, தமிழக அரசின் இ-பெட்டகம் (Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர, 10, 11, 12 வகுப்பு சான்றிதழ்கள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News May 6, 2024

23 நாய் இனங்களை அரசு தடை செய்தது ஏன்?

image

மூர்க்க இன நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால், அத்தகைய 23 நாய் இனங்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில், அமெரிக்கன் புல்டாக், பிட்புல் டெரியர், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட நாய் இனங்கள் அடங்கும். இத்தகைய நாய் இனங்கள் பெரும்பாலும் காவலுக்காக வளர்க்கப்படுபவை. இவற்றுக்கு முறையாகப் பயிற்சி அளிக்காவிட்டால், அந்நியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

News May 6, 2024

‘தக் லைஃப்’ சிம்பு ப்ரமோ இன்று வெளியாகிறது?

image

மணிரத்னம் இயக்கும் கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கால்ஷீட் பிரச்னையால் இருவரும் விலகினர். இதையடுத்து, துல்கருக்கு பதிலாக சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று படத்திலிருந்து சிம்புவின் ப்ரமோ வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், x பக்கத்தில் சிம்பு பெயர் டிரெண்டிங்கில் உள்ளது.

News May 6, 2024

டி20 உலகக் கோப்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

image

டி20 உலகக் கோப்பைக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஐசிசி, போட்டிகளை நடத்தும் நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அச்சுறுத்தல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், போட்டிகளை பாதுகாப்புடன் நடத்த தங்களிடம் திட்டமிருப்பதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.

News May 6, 2024

மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’

image

இயக்குநர் மாரி இயக்கும் புதிய படத்திற்கு ‘பைசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளதா நிலையில், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

News May 6, 2024

நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் மாணவர்களே

image

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் மிளிருமாறு வாழ்த்திய அவர், இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும், அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!