India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் மிக உயர்ந்த அரசுத்துறை பதவியான ஐஏஎஸ் பதவியிலுள்ள அதிகாரிகளுக்கு மாதம் ₹56,100 முதல் ₹1,31,249 வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்களை விட இஸ்ரோ, டிஆர்டிஓ விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இந்திய வனத்துறை அதிகாரிகள் (IFS), பல்கலைக்கழக பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் அதிக ஊதியம் வாங்குகின்றனர். IFS அதிகாரிகள் ₹1,77,500 முதல் ₹2,25,000 வரை ஊதியம் பெறுகின்றனர்.
ரேவண்ணாவின் ஜாமின் மனுவை நாளை விசாரிப்பதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண்களுடன் ரேவண்ணா நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் ஜாமின் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), நாளை 3ஆவது முறையாக விண்வெளிக்குப் பறக்கவுள்ளார். போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் பைலட்டாகவும், பட்ச் வில்மோர் கமாண்டராகவும் செயல்பட உள்ளனர். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு, ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அங்கு 1 வார காலம் தங்கி இருவரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ திரைப்படம், வரும் மே மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தனுஷின் 50ஆவது படமான இதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடல் வரும் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான 4ஆவது மகளிர் டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய சாதனை படைத்துள்ளார். இன்று தனது 300ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கிய அவர், இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் களமிறங்கிய 2ஆவது வீராங்கனை மற்றும் சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5ஆவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். முதலிடத்தில் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் (333) உள்ளார்.
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்த நிலையில், மேலும் சிலர் குடோனுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில நாட்களுக்குமுன் விருதுநகர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் திண்டாடுகிறோம். வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை கடைபிடிக்கலாம். இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள் அணிந்து கொள்வது வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது, குளிர்ச்சியான உணவுகளை உண்பது உடலுக்கு நல்லது. வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் பயணங்களை தவிர்க்கலாம்.
ஒடிசாவில் ஆட்சி என்ற பாஜகவின் பகல் கனவு பலிக்காது என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பரப்புரையில் பேசிய மோடி, ஜூன் 4இல் நவீன் பட்நாயக் வீட்டுக்கு செல்வார் என்றும், அன்றே பாஜக முதல்வர் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜூன் 9ஆம் தேதி 11.30 மணிக்கு நவீன் பட்நாயக் முதல்வராக பொறுப்பேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாகவும், சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.
சித்திரம் பேசுதடி, வெயில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ள பாவனா, வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பாவனா, தன்னை மோசமாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டதாக கண் கலங்கினார். கசப்பான சம்பங்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள சினிமாவை விட்டு விலகி இருந்ததாக அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.